பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும் ே 13| வளர்த்த மகனுக்கு முடிசூட்டு விழா என்ற செய்தி கேட்டதுமொழி மடமான் ஆகிய கைகேயி நாயகம் அனைய மாலை வழங்கி மகிழ்ந்தாள். ஆனால், கொடுமனக் கூனியின் வார்த்தை ஜாலத்தால் மட்டுமன்றிக் கொண்டவன் புகழுக்கு மாசு வரக்கூடாதே என்ற உணர்வினாலும் தூய சிந்தை திரியுமாறு நேர்கிறது. மனிதச் சிந்தனை உள்ளளவும் மாயாப் பழி ஏற்கத் துணிந்துவிட்ட மாபெருந் தியாகியாகக் கைகேயியை விளக்க முனைந்தது புது நோக்கு, புது முயற்சி, வளர்த்த பாசத்தையே சீரணம் செய்து தியாகியாகி வாய் திறவா மெளனயோகம் மேற்கொண்ட வளர்ப்புத் தாயின் திறமும் தரமும் நெடிய சிந்தனைக்கு உரியது. இளைய மென்கொடியாகிய சுமித்திரையின் தாயன்பு தனித்தன்மை வாய்ந்தது. இக் காப்பியத்தின் ஒப்பற்ற கதாநாயகனுக்குச் கைங்கரியம் செய்வதற்கே பிறந்த உறங்காவில்லியைப் பெற்றவள் இவள் என்பதொன்றே இவள் பெருமையைப் புரிந்த போற்றுவதற்குப் போதுமானது. வோறொருத்தி வயிற்றில் பிறந்த மகனுக்குத் தன் மகனைப் பலியிடக்கூடத் துணிந்த சுமித்திரை தாய்மை கணிப்பிலே இமாலயச் சிறப்புக்கு உரியவள் என்றால் மிகையாகாது. நால்வரிடை வேற்றுமை உற்றிலாள் கைகேயி; வேற்றுமை மாற்றினவள் கோசலை. இருவருமே மகன் என்ற உடைமையை விட்டுவிடவில்லை. சுமித்திரை எப்படி? இராமனை அண்ணன் என்று நினையாமல், அடியாரின் ஏவல் செய்க என்று சொன்னதோடு, இடர் வருமேல் முன்னம் முடி' என்று தான் பெற்ற மகனைத் தியாகக் களத்துக்கு அனுப்பினாள். கட்டளை இட்டு அனுப்பினாள். தாயர் மூவரைப் படைத்து, மூவராக மட்டுமன்றி முதிர்ச்சி வகையிலும் ஒருவர்க்கொருவர் சளைக்காதவர்களாகக் கவிச் சக்கரவர்த்தி படைத்திருக்கிறான்.