6. தம்பியரும் இராமனும் மக்கள் நால்வர் - இரண்டு இணைகள் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாகப் பிறந்த இராமனுக்கு மூன்று தம்பிகள் பிறந்தனர். இராமனுக்கு அடுத்துப் பிறந்த பரதன் கைகேயி மகனாவான். இளைய மென்கொடி என்று கம்பனால் வருணிக்கப்படும் சுமித்திரை வயிற்றில் இலக்குவனும் சத்ருக்கனனும் பிறந்தனர். கோசலை வயிற்றில் பிறந்த இராகவன் சிறிய தாயாராகிய கைகேயியினரிடத்திலேயே வளர்ந்தான். கைகேயி மைந்தன் கோசலையிடத்து வளர்ந்தான். இந்த முறைக்கு ஏற்பச் சுமித்திரையின் மைந்தர்களுள் மூத்தவனாகிய இலக்குவன் இராமனிடத்திலும், இளையவனாகிய சத்ருக்கனன் பரதனிடத்திலும் ஒட்டியே வாழ்ந்தனர். பரதன் அருகிக் காட்சியளிக்கும் பரதன் கம்பனுடைய காப்பிய அமைப்பில் காப்பிய நாயகனான இராமன் காப்பியம் முழுவதும் வியாபித்து நிற்கின்றான். எனவே, இலக்குவனுக்கும் அந்த வியாபகம் கிடைக்கின்றது. பால காண்டத்தில் திருமணத்தின்போது காட்சி அளிக்கும் பரதன், அயோத்தியா காண்டத்தில் முடிசூட்டு விழாப் பற்றிப் பெரும் பிரச்சனைகள் தோன்றுகின்ற காலத்தில் பரதன் அங்கு இல்லை. அவன் கேகய நாட்டிற்குப் பாட்டன் வீட்டிற்குச் சென்றிருக்கிறான். இராமன் காடு சென்றவுடன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/150
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை