தம்பியரும் இராமனும் ே 133 தசரதன் இறக்கவும், வசிட்டன் அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்புகிறான். அயோத்தி வந்தடைந்த பரதன் நடந்தவற்றை அறிந்து துயரக் கடலில் ஆழ்ந்து தேறியபின் வசிட்டன் அவனை முடிசூட்டிக்கொள்ளுமாறு வேண்ட, தீயை மிதித்தவன் போல் துணுக்குற்ற பரதன் அண்ணனை மீட்டும் அழைத்துவந்து பட்டத்தை ஏற்கச் செய்யப்போவதாக உறுதி பூண்டு கானகம் செல்கிறான். தாயர் மூவரும் வசிட்டனும் உடன் செல்கின்றனர். இராமனைப் பரதன் சந்திக்கின்றான். பின்னர்க் காப்பிய இறுதியில்தான் பரதனைக் காணமுடிகிறது. பரதனைப் பற்றி இராம்ன் கணிப்பு - பெருமகன் பரதன் போருக்கு வருவதாகத் தவறாக நினைந்து போருக்குரிய கவசம் முதலியவற்றை இலக்குவன் அணியத் தொடங்கியபொழுது, இராமன் பரதனைப் பற்றிக் கூறுவது, அதுவும் பரதன் இன்னும் நெருங்கி வராதநிலையில் அவன் இல்லாதபொழுது அவனைப் பற்றி இராமன் கூறுவது பரதன் பண்பு மட்டுமின்றி இராகவன் பண்பையும் எடுத்துக் காட்டுவதாகும். "இலக்குவ! பதினான்கு உலங்களையும் தாக்கி அழிக்க வேண்டும் என்று நீ கருதினால் அதனை யாரும் விலக்க முடியாது. போர் வலியால் மட்டும் சிந்திப்பதை விட்டு, அறிவினால் ஆராய்ந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். (24.16) "போர் செய்கின்ற தோளையுடைய இலக்குவ! நம் குலத்தில் உதித்தவர்கள் குற்றமற்றவர்களாய் வாழ்ந்து தீர்ந்தவர்கள். அவருள் யாரேனும் ஒருவர் அறத்தினின்று நீங்கினார் என்று சொல்ல முடியுமா?" (2417) "எத்தனை வேதங்கள் உண்டோ அத்தனை வேதங்களும் அறநெறி என்று சொல்வது எதனை என்று தெரியுமா? பரதனது செய்கைகளையே அந்த வேதங்கள் அறநெறி என்று கூறுகின்றன. பரதன் செய்கை இவ்வறநெறிக்கு மாறுபட்டவை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/151
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை