134 38 இராமன் - பன்முக நோக்கில் அல்ல. அப்படிப்பட்டவன் பரதன் என்பதை நீ அறியாமற் போனதற்குக் காரணம் என்மீது வைத்த அளவற்ற அன்பினாலேயே ஆகும்” என்ற பொருள் தரும் பாடல் வருமாறு: "எனைத்து உளமறை அவை இயம்பற்பாலன, பனைத்திரள் கரக்கரிப் பரதன் செய்கையே, அனைத்திறம் அல்லன அல்ல; அன்னது நினைத்திலை, என்வயின் நேய நெஞ்சினால்." - கம்ப. 2418 இதனைக் கூறுகின்றவன் வேதத்தின் வித்தாக விளங்கும் பரம்பொருள் ஆவான். ஆனால், இப்பொழுது அவன் தன்னை இன்னான் என்று நினைக்கவுமில்லை, கூறிக்கொள்ளவும் இல்லை, அறநெறி கூறும் வேதங்களின் முழுவடிவாக உள்ளான் பரதன்' என்று கூறுகையில், பரதன்பால் இராமன் கொண்ட அன்பின் ஆழம் எத்தகையது என்பதை அறிகின்றோம். அதைவிட வியப்பானதொன்றும் இப்பாடலில் உள்ளது. இராமனும் பரதனும் அதிகம் நெருங்கிப் பழகியதாகக் காப்பியம் கூறவில்லை. இராமனைப் பிரியாத நிழல் போல் வாழும் இலக்குவனைப் பற்றி இராமன் அறிந்திருப்பது இயல்பு. ஆனால், நெருங்கிப் பழகாதவனும் இத்தனை பிரச்சனைகளும் நடைபெறுகின்ற காலத்துப் பாட்டன் வீட்டிற்குச் சென்றுவிட்டவனுமாகிய பரதனை, இராகவன் வேதத்தின் வடிவம் என்று எடைபோட்டது வியப்பைத் தருவதாகும். எவ்விதக் குற்றமும் இல்லாத இராகவன் தன்னை ஒத்தவனாகிய பரதனைத்துல்லியமாக அறிந்திருந்ததில் பரதன் பெருமையை மட்டுமல்லாமல், இராகவன் பெருமையையும் அறிந்துகொள்ள முடிகிறது. இதைவிடச் சிறப்பு, பரதன் வருவதன் நோக்கத்தையும் எத்துணை துணுக்கமாகவும் சிறப்பாகவும் முன்னரே அறிந்து வைத்துத் தேவை ஏற்பட்ட விடத்துச் சொல்ல
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/152
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை