தம்பியரும் இராமனும் ேே 135 வேண்டியவனுக்குச் சொல்கிறான். பரதன் வருகை பற்றி இதோ இராமன் பேசுகிறான்: "பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வரும் என நினைகையும், மண்ணை என்வயின் தரும் என நினைகையும் "தவிர, தானையால் பொரும் என நினைகையும் புலமைப்பாலதோ?" (2419) "பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன், நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ? - மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்!" - கம்ப. 24:19, 2420 இங்கே இரண்டாம் பாடலில் அணித்தே நிற்கும் இலக்குவனை இராமன் விளிக்கும் சொற்றொடர் சிந்தனைக்குரியது. "மின்னலைப் போன்று ஒளிவிடும் வேற்படையை உடையவனே!” என்று கூறுவது ஏன்? இப்பொழுது இலக்குவன் கையில் வேற்படையை வைத்திருக்க வில்லை. என்றாலும், அதை நினைவூட்டும்வகையில் இராகவன் அவனை விளித்ததற்குத் தக்க காரணம் ஒன்று உண்டு. இலக்குவனைப் பொறுத்தமட்டில் புத்தியைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் கூடக் கத்தியைப் பயன்படுத்த முயலும் இயல்புடையவன். அதனால்தான் முதற் பாடலின் இறுதியில், "பரதனை நன்கு புரிந்து கொள்ளாமல் நீ தவறாக நினைப்பது நல்லறிவின் பாற்பட்டதன்று” என்று ஓரளவு மனம் வருந்திய நிலையில் பேசுகிறான். பரதனைப் பற்றி இலக்குவனிடம் சொல்லவந்த இராகவன் என்ன அருமையான சொல்லைப் பயன்படுத்து கிறான்! "என்னிடத்துக் கொண்ட அளப்பரும் காதல் காரணமாக வருகிறான் என்பதும், மறுபடியும் மண்ணை எனக்குத் தரவே வருகிறான் என்பதும் நினையாமல்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை