136 38 இராமன் - பன்முக நோக்கில் என்னுடன் போர் செய்ய வருகிறான் என்று நினைப்பது அறிவின்பாற் பட்டதோ' என்று கூறுகையில், பரதன் என்றோ, இளையவன் என்றோ, கைகேயி மகன் என்று கூறாமல், பெருமகன்' என்ற சொல்லை இராகவன் பயன்படுத்துவது பரதனை முற்றிலுமாக அறிந்திருந்தான் என்பதைக் காட்ட வந்த சொல்லாகும். இந்த ஒரு சொல்லைப் பயன்படுத்தியதனாலேயே இலக்குவன் பரதனை நன்கு அறிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், இளையபெருமாள் மனத்தில் பழைய குரோதம் இன்னும் நீங்கவில்லை என்பதை அறிந்த இராமபிரான், அந்தப் பெருமகன் என்ற சொல்லிற்கு ஒரு விளக்க உரையாகவே அடுத்த பாடலின் முதலடியைத் தொடங்குகிறான். பெருமகன் என்ற சொல் யாரைக் குறிக்கப் பயன்படுத்த வேண்டும் என்ற ஐயம் உலகத்தில் யாருக்காவது தோன்றுமேயானால், இலக்குவன் உள்பட அத்துணைப் பேருக்கும் விளக்கம் தருகின்ற முறையில் இரண்டு சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறான், தென்சொல் கடலைக் கடந்தவனும், அறத்தின் மூர்த்தியும், அருள் ஆழியும் ஆகிய இராகவன். இதோ அந்த விளக்கம்: “மிக உயர்ந்து பரந்து எங்கும் விரிந்து நிற்கின்ற அறக்கடவுளின் வடிவமாக உள்ளவனாகிய பரதன், நேர்மை, நடுவுநிலைமை, தூய நல்லொழுக்கம் என்பவற்றைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால் இவற்றின் உறைகல்லாக (ஆணி) விளங்குபவன் பரதன்". தருமத்தின் தேவதையாகவும் நேர்மையின் ஆணியாகவும் உள்ள ஒருவனைத்தான் பெருமகன் என்ற சொல்லினால் இராகவன் குறிக்கிறான். இராமகாதை முழுவதிலும், கவனம் செலுத்திப் பார்த்தால் இச் சொல்லை மற்றோர் இடத்தில் வேறு ஒருவரைக் குறிப்பதற்காக மற்றொருவர் பயன்படுத்திய இடம் உண்டு. அது இதனோடு ஒப்பவைத்து எண்ணத்தகுந்த இடமாகும். R வனத்திடை பொன்மானின் பின்னே சென்றுவிட்டான் இராகவன். சிறிது நேரத்தில் இலக்குவனே! என்று இராமன் t
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை