140 38 இராமன் - பன்முக நோக்கில் ‘ஐயனே! அரசன் இறக்கவும், நீ கானகம் புகவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசை ஆள நான் உன் பகைவனா? அன்றிக் கள்வனா? எதுவும் இல்லையே. (2476) இவ்வாறு பலபடியாகத் தன் துயரத்தையும் இப்பொழுது அகப்பட்டுள்ள இக்கட்டான நிலையையும் எடுத்துக் கூறிவிட்டு, பரதன் இறுதியாகத் தன் வேண்டுகோளை இராமன்முன் வைக்கின்றான். ‘ஐயனே பாவகாரியாகிய என் தாய், தந்தைக்குச் செய்த கொடுமையும், உனக்குச் செய்த கொடுமையும், "எந்தை! நீங்க, மீண்ட அரசு செய்க! எனா, சிந்தை யாவதும் தெரியக் கூறினான்". - கம்ப. 2477 பரதன் புலம்பும் சொற்களைக் கேட்டு, அச்சொற்களின் பின்னே உள்ள அவன் மனநிலையை உணர்கின்றான் தமையன். இற்றதோ இவன் மனம் (2478) என்று கருதி, அமைதியாக விடைகூறத் தொடங்குகின்றான். பரதனுடைய பண்புநலன்களை மிக நன்றாக அறிந்தவன் ஆதலால் உறுதியாக, பரதன் அரசை ஏற்கமாட்டான் என்றும், அவன் கேகேயத்தில் இருந்து அயோத்தி மீண்டவுடன் தன்னைக் காண வருவான் என்றும், மீண்டு வந்து அரசை ஏற்றுக்கொள்க என்று விண்ணப்பம் செய்வான் என்றும் இராமன் அறிந்திருந்தான். அறம் திறம்பாத பரதன் இம்முறையைத்தான் கையாள்வான் என்று உறுதியாக இராகவன் நம்பியிருந்ததால் பரதன் வனத்திடைத் தன்னை காண வந்ததில் வியப்படையவில்லை. ஆனாலும், பரதன் தவக்கோலம் பூண்டு வருவான் என்று முழுதுணர் இராமன்கூட எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அண்ணல் பூண்ட தவக்கோலத்தின் எதிரே தான் அரச வேடத்துடன் வருவது பொருத்தமாய் இராது என்று எண்ணி இவ்வாறு வந்தான் போலும் என்றுகூட இராகவன் நினைத்திருக்கலாம்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை