பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ேே 141 அதனால்தான் ஆளவேண்டிய நீ இவ்வேடம் புனைய் க் காரணம் என்ன என்று இராமனே வினவி விட்டான். அந்த வினாவை வேறுவிதமாக எடுத்துக்கொண்டு, அதற்குக்கூடத் தனக்கு தகுதியில்லை என்றும், சந்தர்ப்பம் பார்த்து அரசை வவ்வும் திருடனோ பகைவனோ அல்லன் தான் என்றும் அறத்தை வாளினால் கொன்று தின்பவன் தான் அல்லன் என்றும் அடுக்கிக் கொண்டே சென்ற பரதனுடைய சொற்கள் அவனுடைய உதட்டினின்று வராமல் அவனது ஆழ்மனத்தினின்று புறப்பட்டவை ஆகும் என்பதை உணர்ந்த இராகவன் அதிர்ச்சியுற்று விட்டான். பரதன் மனம் உடைந்துவிட்டது என்பதை நன்குணர்ந்து கொண்ட பெரியபெருமாள் மிக அமைதியாக, தருக்கரீதியாகப் பேசத் தொடங்குமுன், "வெற்றி வீரனே! யான் விளம்புவதைக் கேட்பாயாக!' என்று தன் பேச்சைத் தொடங்கினான். சொற்ற வாசகத் துணிவு உணர்ந்தபின், r "இற்றதோ இவன்மனம்? என்று எண்ணுவான், 'வெற்றிவீர! யான் விளம்பக்கேள்' எனா, முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்." - - கம்ப. 2478 அரசைத் துறந்து, தவக்கோலம் பூண்டு அழுத கண்ணிருடன் நிற்கும் ஒருவனைப் பார்த்து, வெற்றி வீர' என்று விளிப்பது பொருத்தமில்லாத விளியாகத் தோன்றலாம். வெற்றி வீர என்ற சொல்லை நாம் காணும் பொருளில் இராகவன் கூறவில்லை. "தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி (2387) எதிரே நிற்கும் தன் தம்பியின் தியாகத்தை நன்குணர்ந்து கொண்ட கருணை வீரனாகிய இராகவன், ஆசையை அறவே அறுத்து, புலன்களை ஒடுக்கி அகங்கார, மமகாரங்களைச் சுட்டு எரித்துவிட்டுச் சுயம் பிரகாசமாய் நிற்கும் பரதன் பொறிபுலன்களை வெற்றி கொண்டவன் என்ற கருத்தில்தான் வெற்றிவீர!” என்று