பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f42 r 38 இராமன் - பன்முக நோக்கில் அழைக்கின்றான். புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரமாம் என்ற ஒளவையார் வாக்கும், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் வீரம், என்ற சேக்கிழார் வாக்கும் இங்கு நினையத் தக்கவை. (113) அடுத்து விளம்பக்கேள்' என்ற சொற்களை வேண்டும் என்றே இராமன் சொல்கிறான். 'விளம்புதல்’ என்பது பொறுமையாக, மெதுவாக, அவசரமில்லாமல், ஆழ்ந்த சிந்தனையுடன் பேசுவதையே குறிக்கும். யான் விளம்பு, நீ கேள் என்று இராகவன் சொல்லும் பொழுதே "பரதா! அவசரப்பட்டுப் பேசுகிறேன் என்று நினைந்துவிடாதே. ஆழ்ந்து சிந்தித்தபின்தான் ஒருசில முடிவுகளைக் கண்டு இப்பொழுது உன்னிடம் அவற்றைச் சொல்லப்போகிறேன்” என்ற முன்னுரையுடன் பேசத் தொடங்குகிறான் அருளுடை அண்ணல், “அருமைத் தம்பி பரதா! வாய்மை, நீதி என்பவை சொல்லும் உயர்ந்த கருத்துகளுடன் அறமும், அடிப்படையான சுருதி நூல்களும் நன்கு அறிந்த தந்தை ஏவலின்படி அனைத்தும் நடைபெறுகின்றன என்பதை நீ அறிய வேண்டும்". (2479) சிறந்த குரவர்கள் யார் யார் என்று பட்டியல் இட்டுக் கூறும் இராகவன், “இக்குரவர்களுள் முதலிடத்தை வகிப்பவர்கள் தாய் தந்தையரே ஆவர்" என்று கூறுகிறான். (2481). அடுத்து 'பரதா! தாய் கொண்ட வரத்தின் அடிப்படையில் தந்தை எனை வனம் செல்லுமாறு ஏவினார். அதே வரத்தின் அடிப்படையில் நீ அரசை ஏற்க மறுப்பது சரியாகுமா? ஆராயும் அறிவினை உடைய நீ குரவர் ஆணையை மீறலாமா?” (2482) - "பரதா! புதல்வர்கள் என்பவர்கள் தாய் தந்தையருக்கு தாம் செய்யும் செயல்கள் மூலமாக நற்புகழை உண்டாக்க வேண்டுமே தவிர வன்பழியை உண்டாக்கக் கூடாது (2483) என்ற கருத்தில் நான்கு பாடல்களில் தான் வனமாள்வதும்,