தம்பியரும் இராமனும் ே 143 பரதன் நாடாள்வதும் தசரதனுக்குப் புதல்வர்களாய் பிறந்தவர்கள் என்ற முறையில் செய்துமுடிக்க வேண்டிய கடமைகளாகும் என்பதை வலியுறுத்துகிறான், நியாயத்தின் நிலயமான அண்ணல், இங்ங்னம் அவன் கடமையை வலியுறுத்துவதில் ஒர் ஆழ்ந்த காரணமும் உண்டு. ஒருவன் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடமையை நிறைவேற்றும் பொழுது தன்னுடைய விருப்பு வெறுப்புகளையும், அக் கடமை தனக்களிக்கப்பட்டது நியாயமா என்ற ஆராய்ச்சியையும் இடையே புகுந்து விட அனுமதிக்கக் கூடாது. தாய் வரங் கொண்டது தவறு, தந்தை அதற்கொப்பியது அதைவிடப் பெரிய தவறு என்ற கருத்தில் தான் பரதன் இதுவரை பேசிவந்தான். அதற்கு விடை கூற வந்த இராகவன், முதற்குரவர்களாகிய தாய் தந்தையர் இட்ட ஆணையை நிறைவேற்றுவதுதான் தலையாய கடமையே தவிர அவர்கள் செயலை ஆராய்வது மைந்தர்களின் உரிமை அன்று என்ற அருங்கருத்தை, அதாவது பரதன் செய்வது தவறு என்ற கருத்தை அவன் மனம் நோவாமல் அருளுடை அண்ணல் மென்மையாக, பரதன் மனங்கொள்ளுமாறு எடுத்துரைப்பது மனித நேயத்தில் இராகவன் ஈடுஇணையில்லாது உயர்ந்து நிற்கிறான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பரதன் நாடாள்வது தான் அவன் கடமை என்று தருக்க ரீதியாக இதுவரை உணர்த்திய பெரிய பெருமாள் இனி வரும் பாடலில் பரதனுக்கே அந்த உரிமை உண்டு என்பதை மிக மிக நுணுக்கமாக - பரதன் மட்டும் புரிந்து கொள்ளுமாறு பேசுவது - இராமனின் சொல்லாற்றலுக்குச் சிறந்த உதாரணமாகும். w "வரன்நில் உந்தைசொல் மரபினால், உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால், உரன்ரின் நீபிறந்து உரிமை ஆதலால், அரசு நின்னதே ஆள்க' என்னவே, " - கம்ப. 2485
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/161
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை