144 38 இராமன் - பன்முக நோக்கில் இப்பாடலுக்குப் பலரும் கூறும் பொருள் பொருந்தாமை காண்டல் வேணும். “வரத்தில் நின்று உன் தந்தை சொல்லிய படி இப்பூமி உனக்கு என்று இயைந்த தன்மையாலும், எனக்குப் பின் நீ பிறந்ததால் இவ்வாட்சி உனக்கு உரிமை ஆயிற்று" என்று பொருள் கொள்ளுதல் சிறிதும் பொருத்தமாகப் படவில்லை. உரனின் நீ பிறந்து உரிமை ஆயிற்று' என்று கூறுவது, வரத்தினால் வந்தது என்பதோடு பொருந்தாமை அறியவேண்டும். வரத்தினால் வந்து உனக்கு உரிமை ஆயிற்று என்று சொல்வது சரி. நீ பிறந்து, அதனால் உரிமை ஆயிற்று என்று கூறுவது முதலில் கூறிய வரத்தால் உனக்கு இயைந்தது என்பதோடு பொருந்தாமையை அறிய வேண்டும். இப்படிப் பொருள் கொண்டால் இதில் புதுமையான காரணம் எதையும் இராமன் காட்டியதாகத் தெரியவில்லை. வரக் கதையை நன்கறிந்தவன் பரதன். அப்படியிருக்க, இராமன் அதைத் திருப்பிச் சொன்னவுடன், நீ கூறியதை நான் ஏற்றுக் கொள்கிறேன்; அரசு என்னுடையதுதான். இப்பொழுது நான் வேண்டுகிறேன், நீ வந்து அரசாள்க' என்று பரதன் கூறுவதாக வரும் அடுத்த பாடல் - முதற்பாடலுக்கு ஏனையோர் கூறும் பொருளை ஏற்றுக் கொண்டால் - பொருளற்றதாகிவிடும். நடந்தவை அனைத்தும் தவறு என்று சாதிக்கும் பரதனிடம் அதே வரக் கதையை இராமன் சொன்னவுடன் எப்படி மனம் மாறி உடனே அரசை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்வான்? பரதன் திடீரென்று மனம் மாறியதற்கு மிக வலுவான காரணம் ஒன்றை, வரனில் உந்தை சொல் என்ற பாடலில் இராமன் காட்டியிருக்க வேண்டும். இதுவரை, பரதன் சிந்திக்காமல் இருந்த அந்தக் காரணத்தை அப்பாடல் பரதனுக்கு நினைவூட்டியிருக்க வேண்டும். சங்கேத மொழியில் இராகவன் அந்த வலுவான காரணத்தைக் கூறியவுடன் அதனைப் புரிந்தகொண்ட பரதன் உடனே மனம் மாறி விட்டான். அதற்கு ஏற்றபடி அப்பாடலுக்குப் பொருள் செய்வதற்கு முன், வான்மீகி இதே இடத்தில் அதாவது, இராம - பரத
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/162
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை