தம்பியரும் இராமனும் ே 145 உரையாடலில் கூறிய ஒரு பாடலைச் சிந்திக்க வேண்டும். வான்மீகியின் அயோ காண்டம் 107ஆவது சருக்கம் 7ஆவது பாடலில் சொல்லப்பட்ட கருத்தாவது: “சகோதரனே! நம் தந்தையானவர் முன்னொரு காலத்தில் உனது தாயை மணம் செய்து கொள்ளும்பொழுது உன் தாய்ப்பாட்டனாகிய கேகயனிடத்தில் இராஜ்ய சுல்க்கமாக இந்நாட்டை வாக்களித்தார் என்று வரும் பாடலை அடுத்து வரும் 13ஆவது பாடலின் பொருள் வருமாறு: 'பரதா! பிரபுவாகிய சக்கரவர்த்தியாரைக் கடனிலிருந்து எனக்காக நீக்கி வை. இந்த இரு பாடல்களையும் மனத்துட் கொண்டுதான் கவிச்சக்கரவர்த்தி வரன்நில் உந்தை' என்ற பாடலைப் பாடியுள்ளான். இப்பொழுது இக் கருத்தை மனத்துட்கொண்டு அப்பாடலை மறுபடியும் காணலாம். . வரன்நில் - சிறந்தவரான, உந்தை - உன்தந்தை சொல் மரபினால் (உன்னுடைய தாய்ப் பாட்டனாரின்) சொல்லிய மரபுப்படி, உடைத் தரணி - உன்தந்தையார் பெற்றிருந்த இத்தரணி, நின்னது - உன்னுடையது என்று; இயைந்த தன்மையால் - பொருந்தி விட்ட படியாலும்; உரனின் - வலுவுடைய, நீ பிறந்து - நீ பிறந்து விட்ட காரணத்தால்; உரிமை ஆதலால் (உன் பாட்டனாரிடம் தந்தை ராஜ சுல்க்கம் என்று சொல்லிய மரபுக்கு ஏற்ப உனக்கு முன்னரே இயைந்து விட்ட இத்தரணி) உனக்கு உரிமையாகி விட்டது; அரசு நின்னதே - (தந்தை முன்னர் உன் பாட்டனாரிடம் வாக்களித்தபடி) இவ்வரசு உன்னுடையது என்பதில் ஐயமில்லை; ஆள்க - நீ சென்று உன் உரிமையான அரசை ஆள்வாயாக. பாடலின் பொருளைக் கொண்டு கூட்டித் தேவையான சொற்களை வரவழைத்துப் பொருள் கொள்வது கடினம் என்றாலும், இவ்வாறு பொருள் கொள்வது தவிர வேறு வழியில்லை. தாய் கொண்ட வரம் என்ற பிரச்சனையை விட்டுவிட்டு இப்பொழுது புதிய வாதத்தைப் பேசுகிறான், இராகவன். "உந்தை சொல்லிய மரபினால், நீ பிறப்பதற்கு முன்பே இத்தரணி உனது என்று இயைந்துவிட்டது. அடுத்து _E-10
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/163
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை