பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f46 38 இராமன் - பன்முக நோக்கில் நீ பிறந்தபொழுது முன்னரே உனக்கு இயைந்த இந்த அரசு, இப்பொழுது உரிமையாகிவிட்டது சென்று ஆள்வாயாக" என்று இராகவன் கூறியவுடன் இந்தப் புதிய வாதத்திற்கு மறுப்புச் சொல்ல முடியாதவனாய்ப் பரதன் அரசை ஏற்றுக் கொண்டு விட்டேன்' என்று ஒத்துக்கொண்டு, மேலும் பேசத் தொடங்குகிறான்: "முன்னர்வந்து உதித்து, உலகம் மூன்றினும் நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார் என்னது ஆகில், யான் இன்று தந்தனென், மன்ன! போந்து நீ மகுடம் சூடு எனா, " * - கம்ப 2486 “எனக்கு முன்ரே பிறந்த நீ, மூன்று உலகத்தினும் உனக்கு ஈடானவர் யாருமில்லை என்று சொல்லத் தக்க நீ பிறந்து விட்ட இந்தப் பூமி என்னது ஆகில் (நான் பிறப்பதற்கு முன்பே என்னுடையதாகி விட்டது என்று நீ கூறுவதுபடியே இருப்பினும்) யான் இன்று தந்தனென் - (பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற உரிமைப்படி அரசனாகிவிட்ட நான் இன்று இவ்வரசை உனக்கு அளிக்கின்றேன். நீ நாடு திரும்பி மகுடம் சூடுவாயாக" என்று கூறினான். இந்த இரண்டு பாடல்களுக்கும் இவ்வாறு பொருள் கொள்ளாவிட்டால் முதல் பாடலில் 2, 3 அடிகளில் வரும் முரண்பாட்டைத் தவிர்க்க முடியாது. மேலும், இப்புதிய பொருளைக் கொள்ளாவிட்டால், திடீரென்று பரதன் மனம் மாறியதற்கும், நான் இன்று தந்தனென்' என்று கூறுவதற்கும் வேறு காரணம் கூறமுடியாது. 'தாய் பெற்ற வரம் அநியாயமானது, தந்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. இராமனுக்குரிய அரசைத் தான் ஏற்பது என்பது அற்றம் பார்த்துப் பிறர் சொத்தை அபகரிக்கும் கள்வர் அல்லது பகைவர் செயலாகும்' என்றெல்லாம் பேசிய பரதன், திடீரென்று மனம்மாறி, நான் இன்று தந்தனென் போந்து மகுடம் சூடு என்று பேசுவது எவ்வாறு பொருந்தும்? அண்ணனைத் தெய்வமாக மதித்து வழிபடும் பரதன், தாய்