பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 38 இராமன் - பன்முக நோக்கில் கூறாமல் விட்டுவிட்டான் என்ற வினா எழுவது முறையே ஆகும். தான் படைத்த பாத்திரத்தை மிகச் சிறப்புடையதாக, ஈடு இணையற்றதாக ஆக்க வேண்டும் என்று நினைக்கின்றான் கம்பன். கூடுமானவரை வான்மீகியைப் பின்பற்றியே பாடிவரும் கவிஞன், அந்தப் பாத்திரத்திற்குக் குறைவு ஏற்படும் வகையில் மூலநூல் இருந்தால் ஆழ்ந்த யோசனையுடன் அந்த இடங்களை மாற்றிவிடுவது கம்பனுக்குக் கைவந்த கலை. தசரதனை வாய்மையும் அறமும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளலாகப் படைக்க விரும்பிவிட்டான் கவிஞன். கன்யா சுல்கத்தை நேரடியாகப் பாடினால், அதைத் தெரிந்திருந்தும் இராமனுக்கு முடிசூட்ட நினைந்தது பெரும் தவறாக முடியும். மூலநூலில், திருமணம் ஆகிவந்த பரதன், தாய்மாமன் அழைப்பின் பேரில் கேகயம் சென்றான் என்றுள்ளது. பரதன் இல்லாதிருக்கும் பொழுதே இராமன் முடிசூடலை நடத்திவிட வேண்டும் என்று தசரதன் நினைந்ததாகவும் உள்ளது. இவற்றையெல்லாம் காட்டாமல் தசரதனை உயர்த்தியே பாடிவருகிறான். ஆதலால் கன்யா சுல்கக் கதையைச் சொல்ல விரும்பவில்லை. பதவியில் யார் - இது வேறு வகைப் போட்டி கம்பன் பாடிவரும் முறையில் இராம - பரத உரையாடல் ஒர் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. என்ன சொல்லியும் அரசு தன்னுடையது என்று பரதன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த நிலையில் கேகயம் சென்றிருந்த பரதன் நிச்சயமாக இராஜ சுல்க விவகாரத்தை அறிந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தில்தான் அதை மறைமுகமாக, அயல் நின்றார் யாரும் அறியா வண்ணம் பரதனுக்கு மட்டும் நினைவூட்டுவதாகத் தன் பாடலை அமைத்துச் செல்கிறான், கவிஞன். "அரச உரிமை பெற்ற நான், உனக்கு இராச்சியத்தைத் தருகிறேன் (இன்று தந்தனென்)" என்று பரதன் கூறியதை இராமனால் மறுக்க முடியவில்லை. பரதன் இவ்வாறு