தம்பியரும் இராமனும் ே 149 கூறியதோடல்லாமல் இராமன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "போந்து காத்தி" (2487) என்று வேண்டினான். இராமனுடைய தருக்கவாதம் இப்பொழுது அவனையே பற்றிக் கொண்டது. இன்று தந்தனென், போந்து காத்தி' என்று பரதன் சொன்னதை ஏற்றுக்கொண்ட இராகவன், "பரதா! உன் வேண்டுகோளுக்கு இசைந்து அரசை ஏற்றுக் கொள்கிறேன் என்று வைத்துக் கொண்டால் தந்தையின் இரண்டாவது கட்டளையை மீறுபவன் ஆவேன். அந்த ஆணையை மீற என்னால் இயலாது. இப்பொழுது உன் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட நான் அரசனாகி விட்டேன் அல்லவா? எனக்கென்று ஒரு கடமை உண்டு. என் தந்தையின் ஆணையை நான் நிறைவேற்ற வேண்டும். எனவே, அந்தப் பதினான்கு ஆண்டுகளும் எனக்காக நீ ஆட்சி செய்வாயாக, இது என் ஆணையாகும்" என்று கூறிய இராகவன், வேறு சமாதானம் கூறி இதனைப் பரதன் மறுத்து விடுவானோ என்ற கருத்தில் தான் ஆள் என் ஆணையால் என்று கூறுகிறான். மேலும் அரசனாகிய தான் இட்ட ஆணையை பரதன் மீறக் கூடாது என்பதற்குத் தன்னையே எடுத்துக்காட்டாகப் பேசுகிறான், இராகவன். 'பரதா! தந்தை உயிரோடு இருக்கும்பொழுதே எனக்கு முடிசூட்டுகிறேன் என்று அவர் சொன்னபொழுது அவர் ஆணையை மீறமுடியாது என்ற காரணத்தால்தானே அதனை ஏற்றுக் கொண்டேன். இதனை நன்கு அறிந்த நீ இப்பொழுது நான் உயிருடன் இருக்கும்பொழுது நீ எப்படி ஆட்சி செய்யலாம் என்று கலங்கத் தேவை இல்லை. என் ஆணையை மீற உனக்கு உரிமை இல்லை" என்ற கருத்தில் இராமன் பேசுவதாகப் பின்வரும் இரண்டு பாடல்களை அமைக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவை வருமாறு: எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ்எனா வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ தந்தபாரகம் தன்னை, மெய்ம்மையால் அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்."
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/167
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை