150 கிே இராமன் - பன்முக நோக்கில் "மன்னவன் இருக்கவேயும், மணி அணி மகுடம் சூடுக" என்ன, யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி; அன்னது நினைந்தும், நீ என் ஆணையை மறுக்கலாமோ? சொன்னது செய்தி, ஐய! துயர் உழந்து அயரல்! என்றான்." - கம்ப 2490, 2491 இவ்வளவு கூறியும் பரதன் இணங்காததைக் கண்ட இராமன் HCCCK00 CCCYCC SCSSCSYZYYCCC CHzYYY ஆனது ஒர் அமைதியின் அளித்தி . ан в нявы = ************************************* - (2506) என்று பேகம் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்தப் பாடலில் இராமனுடைய சிறப்பை மேலும் உயர்த்தி விடுகிறான் கம்பன். ஒரே பாடலில் 'யான் உனை இரந்தனென், அதாவது உன்னை மிகவும் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்' என்று தொடங்கி, மறுபடியும் என் ஆணையை மீறாதே என்றும் கூறுவது இராமனுடைய பண்புக்கு மெருகூட்டுவதாகும். அடுத்து, இராமனை வணங்கி அவன் திருவடிகளைப் பெற்றுக் கொண்டு அதன் பிரதிநிதியாக இருந்து தான் ஆளப்போவதாகக் கூறும் பரதன், அண்ணன் எதிரே 'உன்மீது ஆணை’ என்று ஆணையிடுகிறான். எதற்கு? பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் நீ வந்து அரசை ஏற்கவில்லை என்றால் நான் தீயிடைப் புகுந்து இறப்பது உறுதி, உன்மேல் ஆணை (2507) என்ற கருத்தில் பேசுவது இராமனை நெகிழவைத்துவிடுகிறது. - நந்தியம்பதி பரதனை இராமன் நினைவது இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பரதனைப் பற்றி இராகவன் நினைக்க வேண்டிய சூழ்நிலை போர்க்களத்தின் மத்தியில் தான் வருகிறது. (கிட்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் நிலைபற்றிச் சுட்டும்போது பரதனை இராமன் நினைவு கூர்வது மின்னல் போன்ற சிறு நினைப்பே) அரக்கியைச் சீதையின் வடிவம் கொள்ளுமாறு செய்து அனுமன் எதிரே
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை