தம்பியரும் இராமனும் 38 151 அவளை வெட்டிப் போட்டுவிட்டு "அயோத்திக்குச் செல்கிறேன், பரதனை அழிக்கிறேன் பார்” என்று இந்திரசித்தன் வடக்கு நோக்கிப் புறப்பட, அச்செய்தியை இராகவனிடம் வந்து சொல்கிறான் அனுமன். அது கேட்ட இராகவன், "பரதனும் தாயரும் இக்கொடியவன் கையில் அகப்பட்டு என்ன கதி அடையப்போகிறார்களோ' என்று பெரிதும் கலங்கிவிட்டான். அந்நிலையில் அண்ணன் கலங்கும் போதெல்லாம் அவனுக்கு ஆறுதலும், மனத் திடமும் தந்து உதவும் இராமானுசனாகிய இலக்குவன் பரதனைப் பற்றிக் கவலைப்படுவது தேவையில்லை. மூன்று உலகங்களையும் அழிக்கும் ஆற்றல் பரதனுக்கு உண்டு (8920) என்றும், நாகபாசத்தாலும், நான்முகன் படையாலும் மயங்கி வீழ்ந்த என்னைப் போன்ற எளிமையானவன் அல்லன். (892)பரதன் என்றும் எடுத்துக் கூற, இராமன் அமைதி அடைகின்றான். காப்பிய முடிவில் சந்திப்பு இதனை அடுத்து, பரதனும் இராமனும் சந்திக்கும் டம் காப்பிய முடிவில் மீட்சிப் படலத்தில்தான். இராமன் பரதனை அணைத்து மகிழ மனம் மாறிய இலக்குவனும் பரதனை வீழ்ந்து வணங்குகிறான். (10278) "தழுவினன் நின்றகாலை, தத்தி விழ் அருவிசாலும் விழுமலர்க் கண்ணி மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி வழுவுற, பின்னி மூசு மாகண்ட சடையின் மாலை கழுவினன், உச்சிமோந்து, கன்று காண் கறவைஅன்னான்" - கம்ப 10279 என்ற இப்பாடலின் மூலம் மனிதனாக இருக்கும் இராமன் தன்னை ஒத்தவனும், மாமனிதனும் தம்பியுமாகிய பரதனிடம் எந்த அளவுக்கு ஆழமான அன்பை வைத்திருந்தான் என்பதைக் கவிஞன் எடுத்துக் காட்டுகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/169
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை