இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடங்களை அடுக்கிக் காட்டுகிறார் பேராசிரியர். இப்படி எத்தனையோ புதுமைகளையும் துட்பங்களும் கொண்டு திகழ்கிறது இந்நூல். கம் பராமாயணம் நாம் அறிந்தது; ஆனால் கம்பராமாயணம் பற்றிய இவ்வாராய்ச்சி நூலில் உள்ள அரிய கருத்துக்கள் நாம் அறியாதன. இதனைப் படித்து முடிக்கும் போது அறியாதன அறிவித்த அத்தா' என்று அறிஞர் அ.ச. ஞா. வை ஒவ்வொருவர் மனமும் கொண்டாடும் என்பது உறுதி. கம்பநாடனின் காவியத்தில் புதைந்து கிடக்கும் மறைவான அழகுகளைக் கண்டு கவிதையனுபவம் சிறக்கக் கைவிளக்காய் நன்னூல் படைத்து உதவிய பேராசிரியரை நன்றியோடு போற்றி வணங்குகிறேன். அன்பன், தெ. ஞானசுந்தரம், 3.2,97 "கலையகம்” 149, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் சென்னை - 600 101.