152 38 இராமன் - பன்முக நோக்கில் இலக்குவன் பின் பிறந்தாரில் இலக்குவன் இராமானுஜன் என்று போற்றப்படும் இளையபெருமாள் சுமித்திரை பெற்ற சிங்கமாவான். இராமகாதை முழுவதிலும் இராமனுடைய நிழல்போல் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அந்த அறத்தின் மூர்த்தியைப் பிரியாது இருப்பவன் இலக்குவனே ஆவான். இராமனுக்கு நேர் இளையவன் பரதன். அவனுக்கு நேர் இளையவன் இலக்குவன். எனவே, இராகவன் இலக்குவனைத் தன் இளைய தம்பியாக மட்டும் கருதாமல், ஒரு குழந்தையாகவே கருதுகிறான். இராமகாதையில் உள்ள தனிச்சிறப்பு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இராமனை அடுத்துப் பிறந்த மூவரும் ஒவ்வொருநாள் இடைவெளி விட்டுப் பிறந்தவர்களே ஆவர். துல்லியமாகக் கூறவேண்டுமானால், இராமனுக்குப் பின்னர் இரண்டு நாள் கழித்துப் பிறந்தவனே இலக்குவன் ஆவான். இது இவ்வாறாயினும் பரதன் முதலிய தம்பிமார்கள் அண்ணனாகிய இராகவனைத் தங்களை விடப் பல்லாண்டுகள் முன்பிறந்தவன் போலவே கருதி, போற்றி, வழிபட்டு வந்தனர். மிகத் தேவை ஏற்பட்டபொழுது ஒரிரு சமயங்களில் இராமன் கருத்துக்கு மாறாக இலக்குவன் முரண்டு பிடிக்கிறான் என்பது உண்மைதான். என்ன சொல்லியும் கேளாமல் பிடிவாதம் பிடிக்கும் இலக்குவனைக் கோபித்துக் கொள்ளாமல், முரண்டுபிடிக்கும் குழந்தையை எல்லையற்ற பாசத்தோடு சமாதானப்படுத்தும் பெரியவர்களைப் போலவே இராமன் நடந்துகொள்கிறான். பரதன், இலக்குவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை