தம்பியரும் இராமனும் ேே f53 ஆகிய இருவரிடத்தும் இராமன் கொண்டிருந்த அன்பிற்கு எல்லையே இல்லை. அறிவுடைய தந்தைமார்கள், தனயன்மார்கள் தாங்கள் கொண்டிருக்கும் பாசத்தை எப்போதும் வெளிக்காட்டுவதே இல்லை. மிக இன்றியமையாத சந்தர்ப்பங்களில் அவர்கள் கொண்டிருக்கும் பாசம் அவர்களையும் மீறிச் சொற்களாக வெளிப்படுவதை இன்றும் காணலாம். இதனை, இராமன் பரதனிடம் தன் அன்பை வெளிப்படுத்திப் பேசும் பகுதியில் பரதனும் - இராமனும் என்ற தலைப்பில் கண்டோம். இலக்குவன் சீற்றம் இலக்குவனைப் பொறுத்தவரை ஓரளவு முன்கோபமும், பிடிவாதமும், யாரையும் எடுத்தெறிந்து பேசும் இயல்பும் உடையவன். அவனது இந்த இயல்பை அறிந்த இராகவன், அவன்மாட்டுக் கொண்ட பேரன்பு காரணமாக மிகவும் லாகவமாகவே கையாள்கிறான். இருந்த இடம் தெரியாமல் அண்ணனின் நிழலாய்ப் பின்தொடரும் இலக்குவனுக்கு ஒரு சோதனைக் காலம் வருகிறது. தனி இடத்தில் சீதையோடு மகிழ்ந்து இருந்த இராகவனை, சிற்றன்னை அழைக்கிறாள் என்று சொல்லிச் சுமந்திரன் அழைத்துச் சென்றுவிட்டான். கைகேயியை இராமன் சந்திக்கின்ற வேளையில் நல்லவேளையாக இலக்குவன் உடன் இல்லை. பெரிய தாய் இராமனைக் காடு செல்லப் பணித்தாள் என்ற செய்தி, காட்டுத் தீப்போல் பரவி, தனியே இருந்த இலக்குவனையும் எட்டிவிட்டது. அவன் அடைந்த சீற்றத்தை இதோ கவிஞன் பேசுகிறான். x கண்ணின் கடைத்தி உக, நெற்றியில் கற்றை நாற, விண்ணில் சுடரும்சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப, உள்நிற்கும் உயிர்ப்பு எனும்ஊதை பிறக்க, நின்ற அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். . - கம்பு 1717
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/171
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை