தம்பியரும் இராமனும் 38 155 விட்டதால் கோசல நாட்டிற்கே வரக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. இராமன் இல்லாதபொழுது என்ன நடந்தது என்பதை முழுவதும் அறிந்துகொள்ளாமலேயே போருக்கு வேண்டிய கவசம் முதலியவற்றை அணிந்து, இதோ பேசுகிறான் இளையவன்: "புவிப்பாவை பரம்கெட, போரில் வந்தோரை எல்லாம் அவிப்பானும், அவித்து அவர் ஆக்கையை அண்ட்ம்முற்றக் குவிப்பானும், எனக்கு ஒரு கோவினைக் கொற்ற மெளலி கவிப்பானும், நின்றேன்; இது காக்குநர் காமின் என்றான்." - . - கம்ப 1722 இப்பாடலின் தொனி இலக்குவன் பண்பைச் சிறப்பித்துக் காட்டவில்லை. இராமனுக்கு முடிசூட்டக்கூடாது என்று பகைவர் பலர் கூடித் திரண்டுநின்று அக்காரியத்தைச் செய்தது போலவும் அவர்கள் அனைவரையும் கொன்று ஆகாயம் வரை பிணக்குவியலாகச் செய்யப் போவதாகவும் அவன் பேசுவது எல்லையற்ற அன்பின் அடிப்படையில் விளைந்தது என்றாலும், உணர்ச்சிவசப்பட்டு அறிவைத் துறந்து பேசும் பேச்சாகவே தெரிகிறது. எந்த நிலையிலும் கலங்காத, தம்மை இழக்காத இராமன், பரதன் ஆகிய இருவரோடு ஒப்பவைத்துப் பார்க்கும் பொழுது இலக்குவன் செயல், பேச்சு என்பவை மனத்தில் ஒரு நெருடலை உண்டாக்குகின்றன. இராகவன் இவற்றைப் பெரிதுபடுத்தாமல் ஒரு குழந்தை முரண்டு பிடிக்கும் செயலாகவே கருதுகிறான். போருக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டு நகரைச் சுற்றித் திரியும் இலக்குவன், வில்லை வளைத்து, நாண்ஏற்றி அதிலிருந்து தோற்றுவித்த ஓசை சிற்றன்னையிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த இராகவன் காதில் விழவும், உடனே இலக்குவன் இருக்குமிடம் நாடி அப்பெருமகன் புறப்பட்டு விட்டான். இதனைக் கூறவந்த கவிஞன் இலக்குவன் கோபத்தி என்னும் காலாக்னியை அணைக்க வரும் அஞ்சன மேகம் என்ன வந்தான் என்று கூறுகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/173
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை