தம்பியரும் இராமனும் ேே 甘57 இந்த இரண்டு பாடல்களிலும் இலக்குவன் பேச்சும், "உனக்கு நானே முடிசூட்டித் தருகிறேன்” என்ற முத்தாய்ப்பும் நமக்குப் பெருவியப்பை உண்டாக்குகிறது. இராமன் உண்மையில் யார் என்பதை அறிந்த ஒருசிலருள் அதுவும் அயோத்தியில் உள்ளவர்களுள் இருவர் மிக முக்கியமானவர்கள். பரதனும் இலக்குவனும் இராமனை ஒருநாள் முன்பிறந்த அண்ணன் என்று கருதாமல் மூலமும், நடுவும், ஈரும் இல்லாத ஒரு மூலப் பரம்பொருள் இராமன் என்ற வடிவில் வந்திருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்கள். பெற்ற தாயும் தந்தையும்கூட அறியாத இந்த மறைபொருளை நன்கு அறிந்தவர்கள் இவர்கள் இருவரும்; மான் பின் சென்ற இராகவனுக்கு உதவியாக "நீ உடனே போவாயாக" என்று கட்டளை இட்ட பிராட்டியின் எதிரே இதே இலக்குவன் பேசியதை நினைவில் கொண்டுவருதல் நலம். "பஞ்ச பூதங்களும் அவன் முனிந்தால் நிலை லையும். கார் எனக் கரிய அக்கமலக் கண்ணனை யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்!” (3325 நிசிசரற்கு இடைந்து போய், இராமன் எவ்வம் வந்து அடைந்தபோது அழைக்குமே? அழைக்குமாம் எனின் மிடைந்த பார் அண்டங்கள் மேல, கீழான உடைந்து போம்" (3326) இவ்வாறு இராகவன் உண்மையில் யார் என்று அறிந் திருந்து தேவை ஏற்படும்பொழுது அந்தத் தெய்வ ரகசியத்தை வெளிப்படையாகவே கூறும் இளைய பெருமாள், "கைகேயியை முடித்து இன்று நான் உனக்கு மகுடத்தை வாங்கித் தருகிறேன்" என்று சொல்வது வியப்பினும் வியப்பே ஆகும். இந்த இடத்தில் மனவியலார் கூறும் ஒர் உண்மையை மனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர்மேல் கொள்ளும் எல்லையற்ற அன்பு முக்கியமான சந்தர்ப்பங்களில் அந்த அன்புடையவர்களின் அறிவை மழுங்கச் செய்துவிடுகிறது. இராமன் மாட்டுக் கொண்ட ஈடு இணையற்ற பேரன்பு காரணமாக இப்பொழுது இலக்குவன் பேசுகிறான். அன்பு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை