பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 36 இராமன் - பன்முக நோக்கில் செய்யப்பட்டவர்களின் தராதரத்தை, வன்மையை, ஆற்றலை அன்பு செய்பவர்கள் மறந்துவிடுதல் இன்றும் உலகியற்கை. இந்த அடிப்படையில்தான் இலக்குவன் கொண்ட பேரன்பின் எதிரே இராமன், தன்னைத் தான் காத்துக்கொள்ள முடியாத இரக்கத்திற்குரியவனாகக் காணப்படுகிறான். அந்த நிலையில் தான், நெஞ்சில் கரியாளைக் கொன்று உனக்குரிய முடியை நானே வாங்கித் தருகிறேன்' என்று பேசும் பேச்சு வெளிப் படுகிறது. இலக்குவனிடம் குறை காண்பதற்கோ அவன் பேச்சில் குற்றம் கூறுவதற்கோ இங்கு எதுவுமே இல்லை. | இவ்வளவு விரிவாக இலக்குவன் செயல்களை இங்கு விரித்துக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. இத்துணைக் கோபத்தையும் ஒரே ஒரு சொல் மூலம் நடையில் நின்றுயர் நாயகன் தணித்துவிடுகிறான் என்றால், அவனுடைய பேராற்றலை என்னென்று வியப்பது! இலக்குவன் சீற்றத்தைத் தணிக்க இராகவன் கையாண்ட இருவழிகளில், முதல் வழி இதுவாகும். நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சாதாரண மனிதர்களாகிய நம்முடைய விருப்பத்திற்குக் கட்டுப்பட்டவை அல்ல. எத்தகையவர்களும் அவர்களினும் மேம்பட்ட ஒர் ஆற்றலால் இயக்கப்படுகிறார்கள். அதனால் அவரவர் வினை வழி அவரவர் செயல்கள் நடைபெறுகின்றன என்ற இந்த அறிவுவாத விளக்கத்தை இலக்குவனை நோக்கி மூத்தவன் தருகின்றான். "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, அற்றே, பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான்." - கம்ப. 1734 அறிவுடையவர்கள் யாவரும் இதனை எளிதில் புரிந்து கொள்வார்கள். தண்ணீரைக் கொண்டு வரவேண்டிய ஆறு வற்றிவிட்டால் நதியைக் குறைசொல்லி என்ன பயன்?