தம்பியரும் இராமனும் ேே 159 இங்கே தசரதன், கைகேயி, பரதன் ஆகிய மூவரும் விதியின் விளையாட்டுப் பொம்மைகளாக உள்ளனர் என்பதை அறிய வேண்டும். இந்த மூவருடைய விருப்பங்களில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இராமனுக்கு அரசு தர விரும்பினான் தசரதன். அது நடைபெறவில்லை. பரதனுக்கு அரசு தர விரும்பினாள் கைகேயி. அதுவும் நடைபெறவில்லை. இராமனை மீட்டுக் கொணர வேண்டும் என்ற உறுதியோடு முயன்றான் பரதன். அதுவும் நடைபெறவில்லை. அப்படி யிருக்க, இவர்கள் யாரைக் குறைசொல்வது? "இவர்கள் மூவரையும் விஞ்சி விதி என்ற ஒன்று இவர்களையும் நம்மையும் ஆட்டிப்படைக்கிறது என்பதை அறிந்த நீ, எதற்காகக் கோபிக்க வேண்டும்? யார் மேல் கோபிப்பது?" இந்த அறிவு வாதத்தை முன்வைக்கிறான் இராகவன். இந்தப் பாடலை அவன் சொல்லும்பொழுது கைகேயி முதலியவர்கள் எண்ணம் ஈடேறவில்லை என்று சொல்வதற்குரிய நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்றாலும் இராகவன் வாயில் இவ்வாறு சொற்கள் வருவதே விதியின் கூற்றுப் போலும். இராமனையும் அறியாமல் அவன் உள்ளே இருக்கும் முழுதுணர் ஆற்றல் இவ்வாறு பேசவைக்கிறது. பேரன்பு காரணமாக உணர்ச்சிவசப்பட்டு அறிவால் சிந்திக்க இயலாத நிலையில் உள்ள இளையவன், இராமனுடைய இந்த வாதத்தை ஏற்காததுமட்டுமன்று; அதை எள்ளி நகையாடவும் செய்கின்றான். இவை விதியின் விளையாட்டு என்ற இராமன் கூற்றுக்கெதிரே, "விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி" (1735 என்று கூறி விடுகிறான். . பேரறிவாளனாகிய இராகவன் இலக்குவனின் இப்பொழுதைய மனநிலையில் அறிவுவாதம் பேசிப் பயனில்லை என்பதை எளிதில் கண்டுகொண்டான். அப்படியே விட்டுவிட்டால் அந்தப் பொழுது கழிந்தவுடன் அவன் சினம் சிறிது தணியும் என்று நினைத்து ஒரளவு அதனை ஆறப் போடலாம். இராமன் அவ்வாறு செய்ய
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை