160 38 இராமன் - பன்முக நோக்கில் முடியாமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இலக்குவன் மனக் கொதிப்பை அவ்வளவு விரைவில் ஆற்ற முடியாது என்பது. இராமன் அப்புறம், இப்புறம் நகர்ந்தால் பிறகு இலக்குவனது செயலை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இலக்குவனுடைய பண்பை, அவன் தன்பால் கொண்ட ஈடு இணையற்ற அன்பை நன்கு அறிந்திருந்தவனாகிய அண்ணன், இலக்குவன் மனத்துள்துழைய வேண்டுமானால் அவன் தன் மேல் கொண்ட அன்பையே வழியாகக் கொண்டு அவன் மனத்துள் நுழைய வேண்டும்; நுழைந்து, அவனைத் திருத்திப் பணி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான் அக் கருணை வள்ளல். அவன் பயன்படுத்திய இறுதி அஸ்திரத்தைக் கவிஞன் நமக்குக் காட்டுகிறான். அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்துமுன்னர் அது சென்று பாயும் குறியிடத்தை, இலக்குவன் மனத்தைப் பக்குவம் செய்கிறான். அவனுடைய உள்ளத்தில் கோபம் குடிகொண்டிருக்கிற வரையில் தன் இறுதி அஸ்திரம் உள்ளே நுழைய முடியாது என்பதை அறிந்த பேரறிவாளனாகிய இராகவன் அவனுடைய கோபத்தைப் போக்க ஒரளவு கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறான். "ஆன்றான் பகர்வான் பினும், ஐய! இவ் வைய மையல் தோன்றாநெறி வாழ் துணைத் தம்முனைப்போர் தொலைத்தோ? சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ? ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது? என்றான்." - கம்ப. 1739 "இலக்குவனே! உடன் பிறந்த அண்ணன், தாய், தந்தை இவர்களை வழிபடுவதற்குப் பதிலாக கொன்று தொலைத்துத் தான் உன் கோபம் தணியப் போகிறதோ" என்று கூறியவுடன் இலக்குவன் மனத்தில் இருந்த கோப உணர்ச்சி மறைந்து தன்னிரக்க உணர்ச்சி அவ்விடத்தை நிரம்பிக்கொண்டது. அதனால்,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை