தம்பியரும் இராமனும் ேே 16i SCS CCCCCCCCS CCSSTT CCCCCCCSCCCCCCCCCS CCCS0CCC"தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்; இருதோள் எனச் சோம்பி ஒங்கும் கல்லும் சுமந்தேன்; கணைப்புட்டிலும், கட்டு அமைந்த வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை ? என்றான்." - கம்ப. 1740 என்று கூறியவுடன் தன்னிரக்க உணர்ச்சி மீதுர்ந்துவிட்டதை அறிந்த இராமன், முன்னிருந்த கோப உணர்ச்சியைவிட இலக்குவனுக்கு அதிகத் தீமை பயக்கக்கூடியது இந்தத் தன்னிரக்க உணர்ச்சி என்பதை அறிந்துகொண்டு அவன் அன்பின்வழி தன் இறுதிப் பாணத்தைச் செலுத்துகிறான். "நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்; என்சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈணம்? எனறான - கம்ப. 1741 "தந்தை சொல்லை மீறுவது தகாது என்று கருதி யான் அதனை ஏற்றுக் கொண்டேன். இப்பொழுது உனக்கு மூத்த வனாகிய என் சொல்லை மீறுவதால் உனக்கு என்ன ஏற்படப் போகிறது? மீறாதிருந்தால் அதனால் என்ன இழிவு ஏற்பட்டுவிடப் போகிறது" என்றான். இம்மாதிரி தெரிந் தெடுத்த சொற்களைக் கொண்டு ஒரு மாபெரும் மனமாற்றத் தையே இலக்குவன்பால் ஏற்படுத்தினான், ஒருவன். அவன் யார்?' என்ற வினாவிற்கு விடை தருபவன்போலத் தென் சொல் கடலையும் வடசொல் கடலையும் நிலைகண்டு உணர்ந்தவனும், சொல்லின் ஆற்றலை நன்கு அறிந்தவனும் சொல்ல வேண்டிய சொல்லைத் தேர்ந்தெடுத்து, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லக் கூடிய ஆற்றல் பெற்றவனுமாகிய இராகவன்' என்று முடிக்கிறான் கவிஞன். அ-11
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/179
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை