தம்பியரும் இராமனும் ேே 163 இலக்குவனுடைய இந்தச் சொற்கள் இராமனைத் திகைக்க வைத்ததோடு இந்த அன்பைப் பிரித்தோ, பிளந்தோ அயோத்தியில் விட்டுச் செல்வது என்பது இயலாது என்று உணர்ந்தவுடன் உகும் கண்ணிருடன் தம்பியைப் பார்த்து கொண்டே நின்றுவிட்டான். என்று கற்றாய்? அடுத்து, இந்த இணைபிரியாத் தம்பி, மூங்கில்களை வெட்டி மாணைக் கொடியால் அவற்றை இறுகக் கட்டி அதை அழகிய தெப்பமாகக் கட்டி அதில் எம்பிராட்டியையும், எம்பிரானையும் ஏற்றிவைத்து யமுனை ஆற்றில் நீந்திக் கொண்டே தெப்பத்தை அக்கரை சேர்த்தான். (2034) யமுனையைக் கடந்து மேலும் தெற்கே சென்று சித்திரகூட பர்வதத்தை அடைந்தார்கள். சித்திரகூடத்தில் ஒரு சோலையின் நடுவே இவர்கள் தங்குவதற்கு சாலை ஒன்றை இலக்குவன் தன் கைவண்ணத்தால் நிர்மாணித்தான். அந்தச் சாலை கட்டப்பட்ட முறையை ஆறு பாடல்களில் (2089 - 20.94) மிக நுணுக்கமாகவும் விளக்கமாகவும் கவிஞன் பாடுகிறான். சடையப்ப வள்ளலின் வீட்டில் இருந்து செல்லமாக வளர்ந்த கம்பநாடன் ஒரு பர்ணசாலை அமைக்க எங்கே கற்றான் என்பதை நினைக்க வியப்பு அதிகமாகிறது. மனித சஞ்சாரமற்ற சித்திரகூட பர்வதத்தின் சாரலில் ஓங்கி வளர்ந்துள்ளன பல்வகை மரங்கள், மலர்கள், செடிகொடிகள்; விலங்குகள், தவம் செய்யும் முனிவர்கள் இங்கே வாழ்கின்றனர். இத்தகைய சூழலில்தான் அந்தச் சாலை நிறுவப்பட்டது. அந்தச் சாலையில் பிராட்டியோடு பெருமான் நுழைந்தான் என்ற பகுதியைப் பாடிக்கொண்டே வரும் கம்பநாடன், அந்தக் கற்பனையில் ஆழ்ந்து தன்னையே மறந்து விடுகிறான். இந்த அற்புதமான சூழலில் அமைந்த சாலையில் நுழைந்தவர்கள் தசரத குமாரனும் அவன் மனைவியும் என்பதையே மறந்து விட்டனர். இந்தச் சூழலில் இயற்கையின் நடுவில் இருப்பவன் இறைவன் அல்லவா? அத்தகைய எண்ணம் தோன்றியவுடன் உள்ளே புகுந்தவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/181
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை