164 38 இராமன் - பன்முக நோக்கில் "அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்கள் தோறும் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனே' என்று பாடிவிடுகிறான். அப்பாடல் வருமாறு: இன்னணம் இளையவன் இழைத்த சாலையில், பொன்நிறத் திருவொடும் குடி புக்கான் அரோநல்நெடுந் திசைமுகன் அகத்தும், நம்மனோர்க்கு உன்னஅரும் உயிருளும், ஒக்க வைகுவான்." - கம்ப. 2093 "தொடரும் இடரை இழைத்துவிட்டேனே" பர்ணசாலையுள் நுழைந்த வள்ளல் அதன் புற, அக அழகுகளைக் கண்டு களித்தான். கைதேர்ந்த கட்டடக் கலைஞன் ஒருவன் பன்னெடுங் காலம் நினைத்து அழகே வடிவு கொண்டது போன்று அமைத்த, சாலையாக இருந்தது அது. ஒரு வினாடி கண்ணை மூடித் திறக்கிறான் இராகவன். எதிரே வணக்கத்தோடு நிற்கிறான் இளையவன். பிறந்தது முதல் ஒரு கணம்கூடத் தன்னை விட்டுப் பிரிந்தறியாதவன் இளைய பெருமாள். அரச போகத்தில் பிறந்து அதிலேயே வளர்ந்தவன். வசிட்டனிடம் இருவரும் ஒன்றாகத்தான் கல்வி பயின்றனர். இந்த வினாடி வரை இராமனைப் பிரிந்து ஒரு கணமும் தனியே இருந்திராதவன் இளையவன். இவை அனைத்தும் இராமன் கண்ணெதிரே வரிசையாகத் தோன்றி மறைகின்றன. எப்பொழுது யாரிடம் இக் கலையைக் கற்றான் என் அருமைத் தம்பி என்று சிந்திக்கின்றான், இராமன். விடைகாண முடியவில்லை. தம்பியைப் பார்க்கிறான்; வியப்பைப் புலப்படுத்திக் கசிகின்றான்: "என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, இரு குன்று போலக் குவவிய தோளினாய்! என்று கற்றனை நீ இது போல்? என்றான் - துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்." - கம்ப. 2096
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/182
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை