பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ேே 165 கண்ணிருடன் இராமன் எழுப்பிய இந்த வினாவிற்கு இளைய வனிடமிருந்து எந்த விடையும் வரவில்லை. நீண்ட நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்த இராகவன், தனக்குத் தானே பேசிக்கொள்ளலானான். வனத்திடைப் புகும்போது எவ்வித வசதியும் இல்லாமல் துன்பம் உழக்க நேரிடும் என்று அஞ்சித்தான் இலக்குவனையும் பிராட்டியையும் வரவேண்டாம் என்று இராகவன் கூறினான். ஆனால், மிதிலையர் கோன் மகள் காட்டில் படும் அல்லலைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இராமனுடன் நடந்து வந்ததைக் கண்டு பெருமிதம் அடைந்தான் இராகவன். இளையவன் தொண்டன் என்ற முறையில் காவலுக்கு வருகின்றான் என்றுதான் அனைவரும் கருதினர். என்ன அதிசயம்! மிதிலையர் கோன் மகள் பூவின் மெல்லிய பாதம் காட்டில் நடந்து வந்தது. கணப்பொழுதும் பிரியாத தம்பியின் கைகள் இந்த அற்புதமான சாலையை நிறுவியது. - இந்த எண்ணம் நீண்ட நேரம் மனத்தில் ஒட, இளையவனையே பார்த்துக்கொண்டிருந்த அருளாளன் கண்ணிர் ஆறாய்ப் பெருக, "தந்தையின் ஆணையைச் சிரமேற்கொண்டு அதனை நிறைவேற்றியதால் சூரிய குலத்தில் தோன்றிய பெருமையைப் பெற்று விட்டேன் என்று நினைத்தேன். ஆம்! அந்தப் பெருமையை அடைய முயன்ற முயற்சியில் இளையவனே! நெடுங்காலமாகப் பெருந்துன்பத்தை உனக்கு இழைத்து விட்டேன்” என்று வருந்தின்ான். "அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால், படரும் நல் அறம் பாலித்து, இரவியின் சுடரும் மெய்ப் புகழ்சூடினென் என்பது என்? இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் என்றான்" - கம்ப. 2097 மிக அற்புதமான ஒரு பர்ணசாலையில் வழி நடந்த களைப்புத் தீர மகிழ்ச்சியோடு மனைவியிடம் உரையாடிக் கொண்டிருக்கும் மனநிலையில் பிறர் பற்றியோ, அவர்கள்