தம்பியரும் இராமனும் ேே 167 சித்திரகூடம், பஞ்சவடி........ கதைத் தொடர்ச்சி சித்திரகூடத்தை விட்டுப் பஞ்சவடி செல்ல நினைத்த இராமன் கழுகின் வேந்தன் வழிகாட்ட, பஞ்சவடியில் சென்று தங்கினான். பஞ்சவடியில் தங்கி இருக்கையில்தான் அவதார நோக்கம் நிறைவேறுதற்குரிய சூழ்நிலை உருவாகிறது. இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகை, இராமன் மேல் ஆசைகொண்டு அழகிய வடிவெடுத்து வந்து இராமனுடன் பேசத் தொடங்கினாள். பேச்சு திசைதிரும்பவே, "இளையவன் கண்டால் உன்னை முனிவான்” என்று அவளை விரட்ட - அவள் இலக்குவனிடம் சென்று தன் விருப்பத்தை வெளியிட -இலக்குவன் அவள் மூக்கு முதலியவற்றை அரிந்துவிடுகிறான். ஒடிச்சென்ற அவள் கர,துாஷணர்களை அனுப்பி இராமனைக் கொல்ல முனைந்தாள். அதுகண்ட இளையகோ போருக்குத் தயாராகிவிட்டான். அண்ணனிடம் வந்து வணங்கி, ஆணையிடுமாறு வேண்டுகிறான். ஆனால், இராகவன் "வீரனே ! உன் அண்ணியைக் காத்து நிற்பாயாக யான் அரக்கர் ஆவி பறித்திடுவென். முனிவர்கட்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய சந்தர்ப்பம் இது. எனவே, நானே போருக்குச் செல்கிறேன்" என்று புறப்பட்டு விட்டான். இவ்வாறு புறப்படுவதற்கு மற்றொரு காரணமும் இருந்திருக்கும் போலும். கரனுடன் வந்த துஷணன், திரிசிரா முதலியவர் களைக் கொன்றபின், கரனைக் கொல்ல வில்லை வளைத்த வுடன் அது ஒடிந்து போயிற்று. அரசர்களுக்குரிய முறையில் இடக் கரத்தைப் பின்னே நீட்ட, வருணன் தன் பாதுகாவலாக வைத்திருந்த விஷ்ணு தனுசைத் தர அவ்வில்லில் அம்பு பூட்டிக் கரனைக் கொன்றான். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும், விஷ்ணு தனுசைப் பெற வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், அதனைப் பெறுவதற்கு இலக்குவனுக்கு உரிமை இல்லை என்பதை முழுதுணர் பெருமாள் அறிந்திருந்தான் ஆதலின், அந்த நுணுக்கத்தைத் தம்பியிடம் சொல்லாமல் முனிவர்கட்கு வாக்குக் கொடுத்த செய்தியை மட்டும் கூறிவிட்டுத் தானே போருக்குப் புறப்பட்டு விட்டான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/185
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை