பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ேே. இராமன் - பன்முக நோக்கில் இனி இராம - இலக்குவர் உரையாடித் தொழிற்படும் இடம் மாரீசன் வதைப்படலம் ஆகும். இராவணன் ஏவலால் பொன்மான் வடிவுகொண்டு இராமன் தங்கி இருக்கும் பர்ணசாலை எதிரே விளையாடுகிறான் மாரீசன். பொன்மான் வேட்டை இராமகாதை முழுவதிலும் இராமனைச் சராசரி மனிதனுக்கு இணையாகக் கம்பன் காட்டியது இந்த ஒரே ஒரு படலத்தில்தான். பொன்மான், ஆசிரமத்தின் முன் உலவுவதை முதலில் பார்த்தவள் பிராட்டிதான். அவள் கணவனிடம் சொல்ல, அவனும் அதைப் பார்க்கிறான். பிறகு “மையறு மலரின் நீங்கி வந்த பெருமாட்டி'யாக நடந்து கொள்ளாமல் புதியபொருள் ஏதாவது ஒன்றைக் கண்டால் உடனே அது தனக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் சராசரிப் பெண்ணாக நடந்துகொள்கிறாள் பிராட்டி. இப்பொழுது இளையவன் குறுக்கிட்டு, "இயற்கையின் படைப்புக்கு மாறாக இப்படி ஒரு மான் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது அரக்கர்கள் சூழ்ச்சி” என்கிறான். இதில் தொடங்கி மிக நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெறு கிறது, சகோதரர்களிடையே. இந்த வாதத்தைச் சற்று விரிவாகக் கண்டால் பயனுடைய தாகும். உணர்ச்சிவசப்பட்ட யாரும் அறிவு கலந்து யோசிப்பது என்பது முடியாத காரியம் என்பதை மிக விரிவாகக் கவிஞன் விளக்குகிறான். "பொன்னாலாகியதும், காது, குளம்பு முதலியவற்றில் மணிகள் பதிக்கப்பெற்றதும் ஆகிய மானை வந்து காண்க" என்றாள் பிராட்டி இப்படிப்பட்ட ஒரு மான் இந்த மண்ணுலகில் இருக்க முடியாது என்பதை சற்றும் எண்ணிப் பாராமல் காதலியின் வார்த்தைகளைக் கேட்ட இராகவன், தானும் அம் மானின் மேல் ஆசை கொண்டான். (3284, 3285, 3286. கணவன் மனைவி உரையாடலை அணித்தே இருந்து கேட்டுக் கொண்டிருந்த இளையவன் பேசத் தொடங்கினான்.