தம்பியரும் இராமனும் ேே f7; மானின் அழகிலோ அண்ணனின் வாதத்திலோ தன்னை இழந்துவிடாமல் அறிவு ஒன்றையே துணையாகக் கொண்டு நடைபெறுவதை ஆராயும் மனத்தனான இளையவன் இறுதியாகத் தன் முடிவைச் சொன்னான். அண்ணன் சொல்லியவற்றை மனத்தில் வாங்கிக் கொண்டான். அண்ணன் போக்கு எங்கே கொண்டுபோய் விடும் என்பதைத் தன் தெளிந்த சிந்தையில் விளங்கிக் கொண்டவனாகிய இளையவன், உறுதியோடு பேசத் தொடங்குகிறான். "அண்ணா! இங்கு நாம் கண்டது உண்மையான பொன்மான் என்றாலும்கூட, இப்பொழுது நாம் திரும்புவதே செயற்தகு செயலாகும்” என்றான். (3296) இப்பொன்மானால் நமக்கு எவ்விதப் பயனும் இல்லை, மீள்வதே கருமம் என்று கூறியதைக் கேட்ட சீதை, கணவனைப் பார்த்து, "இந்த மானை நீ பிடித்துத் தந்தால் வனவாசம் முடிந்து அயோத்தி செல்லும்பொழுது விளையாடுவதற்கு இம்மானைக் கொண்டு செல்வேன்” என்றாள். (3297) வாதம் முற்றுகிறது மனைவியின் சொல்லைக் கேட்டு உணர்ச்சி வசத்தால் அவள் கருத்தை முடிக்க வேண்டும் என்ற துணிவுடன் இருக்கும் இராமனை நோக்கித் தெளிந்த அறிவால் உண்மையை உணர்ந்த இளைய பெருமாள் பேசத் தொடங்குகிறான். சீதையின் வேண்டுதலை நிறைவேற்றத் துணிந்த மூத்தவனைப் பார்த்து இளையவன், "ஐயனே! அரக்கர் வஞ்சகத்துடன் செய்த சூழ்ச்சியின் பயனாகும் இந்த மான் என்பதை நீ முடிவில் தெரிந்து கொள்ளத்தான் போகிறாய்" (3298) அதுகேட்ட இராகவன், "இலக்குவ! நீ சொல்வது போல் இது அரக்கர் மாயமாக இருப்பின் நீ இதனைக் கொல்லும்போது ஒர் அரக்கன் அழிவும் உடனேயே நிகழும். உண்மையான மானாக இருப்பின் பிடித்துக் கொண்டு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/189
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை