172 38 இராமன் - பன்முக நோக்கில் வரலாம். இந்த இரண்டில் எது நடந்தாலும் அதனால் நன்மையே விளையும்" என்று கூறினான். (3299) இராமனுடைய வாதத்தை இப்பொழுது நேரடியாகவே மறுக்கத்துணிந்து விட்டான் இலக்குவன். “வயிரத் தோளாய்! இம்மானை ஏவிவிட்டு இதன் பின்னே நிற்பவர் யார் என்றும் தெரியவில்லை. எதற்காக இந்த மாயமானை அனுப்பினர் என்றும் தெரியவில்லை. அவர்கள் சூழ்ச்சியில் தோன்றிய இந்த மான் எத்தகையது என்றும் தெரியவில்லை. ஒன்றும் அறிந்துகொள்ள முடியாத இந்த மானை வேட்டை யாடச் செல்லுதல் பொருத்தமற்றதாகும். நம் முன்னோர் வேட்டைத் தொழிலையே வேண்டாம் என்று ஒதுக்கினவர் என்பதை நீ அறிவாயல்லவா?” (3300) இலக்குவன் வாதத்தின்பின்னே உள்ள அடிப்படையை ஏற்றுக் கொள்ளாமல் இராகவன், "பகைவர் பலர் என்றும், அவர்கள் அரக்கர்கள் என்றும், மாயம்மிக வல்லவர்கள் என்றும் நினைத்து அரக்கர்களை ஒழிப்போம் என்று நாம் மேற்கொண்ட விரதத்தைக் கைவிடுதல் புலமைத்தன்று” என்றான். (380) முடிவாக, இராமன் மனத்தை மாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்ட இளையவன், "அண்ணலே! பகைவர் எத்தனை பேராக இருப்பினும் அம்புகளைத்துவி அவர்களை ஒழித்துவிடுகிறேன். ஒருவேளை இந்த மான் உண்மையிலேயே பொன்மான் எனின் அதைப் பற்றிக்கொண்டு வருகிறேன்" என்றான். (3302) இந்த உரையாடல் முழுவதையும் கேட்டுக் கொண்டு அங்கு நின்ற சானகி, பெண்களுக்கே உரிய முறையில், கண்களில் நீர் வழிந்தோட, வாய்குழறி, "நாயகனே! நீயே . இந்த மானைப் பற்றிக் கொண்டுவந்து எனக்குத் தரமாட்டாய் போலும்” என்று சினத்துடன் கூறி அப்பால் போய்விட்டாள். (3303)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/190
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை