174 38 இராமன் - பன்முக நோக்கில் தன் மனையாளிடத்து எல்லையற்ற அன்பு கொண்டிருந்த இராகவன் அவளுடைய மிக அற்பமான இந்த வேண்டு கோளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்ததிலும் தவறில்லை. இவ்வளவு விரிவாகச் சோதரர்கள் இடையே நடந்த உரையாடல்களை எடுத்துக்காட்டியதில் நோக்கம் ஒன்று உண்டு. மனைவியின் இந்தச் சிறிய ஆசையைக் கூடத் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்றால், கணவனுக்குரிய கடமையிலிருந்து தவறியதாகவே முடியும். இந்த அடிப்படையில் இராமன் செயலை ஆய்ந்தால், அதில் எவ்விதத் தவறும் காணமுடியாது. அப்படியானால் எங்கே குறை நேருகிறது என்று சிந்திக்க வேண்டும். உலகில் இல்லாதன இல்லை என்ற தனது முடிவை இராகவன் தெரிவித்த பிறகுதான், இது அரக்கர் சூழ்ச்சி என்ற தன் இரண்டாவது வாதத்தை இலக்குவன் முன் மொழிகிறான். அரக்கரைக் கொல்வது தனது கடமை; எனவே, மாயமான் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. கொன்றால் ஒர் அரக்கன் ஒழிந்தான். உயிரோடு பிடித்தால் சீதைக்கு ஒரு விளையாட்டுப் பொருள் கிடைக்கும் என்ற விடையால் இலக்குவனது இரண்டாவது வாதம் அடிபடுகிறது. பகைவர் யார் என்று தெரியாது, அவர்கள் சூழ்ச்சி எத்தகையது என்றும் தெரியாது. எனவே வேட்டையாடுவது சரியில்லை என்பது இலக்குவனின் மூன்றாவது வாதம். "ஒருவர், பலர் என்ற கவலை நமக்கு வேண்டாம். எந்தச் சூழ்ச்சியையும் அழிக்கும் ஆற்றல் நம் அம்புகளுக்குண்டு. பகைவர் பலர் என்று அஞ்சி வாளா இருப்பது, நாம் மேற்கொண்ட சபதத்திற்கு ஒத்துப் போகாது. எனவே, நான் செல்கிறேன்" என்ற சொற்களால் இலக்குவனின் மூன்றாவது வாதத்தையும் வென்றுவிடுகிறான் இராகவன். இந்த நீண்ட வாதத்தை மேலாகப் பார்க்கும்பொழுது மனைவிமாட்டுக்கொண்ட கழிபெருங் காதலால் இராமன் தவறு செய்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சராசரி மனிதனாக இராமனை வைத்துப் பார்த்தால் இது ஓரளவுக்குச் சரியேயாகும். எவ்வித உணர்ச்சியுமின்றித் தன் கூர்த்த மதி
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/192
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை