| 176 கிே இராமன் - பன்முக நோக்கில் பரதனைப் பற்றிய அவனுடைய கருத்துகள் எவ்வளவு தவறானவை என்பதை வனத்திடைக் கண்டு கொண்டான். எனவே, உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு எந்த ஒன்றையும் அறிவு பூர்வமாக ஆய்ந்துமுடிவெடுக்கும் மனநிலையைப் பெற்றுவிட்டான். அயோத்தியில் இருந்த இலக்குவன் வானுற வளர்ந்து, ஆரணியத்தில் காட்சி தருவதை இந்த உரையாடல் பகுதி நன்கு எடுத்துக்காட்டுகிறது. சகோதரர்கள் உரையாடலின் அடிநாதம் இராமனைச் சராசரி மனிதனாக வைத்துத்தான் இதுவரை சகோதரரிடையே நடந்த உரையாடலுக்குப் பொருள் செய்துவந்தோம். இந்த ஏழு எட்டுப் பாடல்களிலும் அடியோட்டமாக ஒன்றைச் சொல்லிச் செல்கிறான் கவிஞன். மிகவும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்குமட்டும் அந்தச் சொற்கள் எவ்வளவு ஆழமானவை, நுண்மையான பொருள் தரக்கூடியவை என்று விளங்கும். இலக்குவன், சீதை என்ற இருவரும் மனித வளத்தில் மேம்பட்டுள்ளார்களே தவிர, அதற்கப்பால் உள்ள தெய்விகநிலையோடு ஒன்றியிருக்கும் இயல்பினர் அல்லர். இராமனைப் பொறுத்த மட்டில் நிலைமை வேறு வகையானது. தான் மனிதன் என்ற நினைவுடனேயே பேசிச் செயல்படும் அந்த வள்ளலின் உள்ளே பரம்பொருள் இருந்து தொழிற்படுகிறான் என்பதை மறத்தலாகாது. ஒவ்வோர் உயிருள்ளும் இறைவன் இருக்கிறான் என்பது மிகப் பழங்காலம் தொட்டே இந்நாட்டில் உள்ள வைணவம், சைவம் என்ற இரண்டு சமயங்களும் ஏற்றுக் கொண்ட கொள்கையாகும். அப்படி இருக்க, இராமனுள் மறைந்த நிற்கும் பரம்பொருள் தொழிற்படுகிறான் என்று கூறுவது சரியா என்று எண்ணத் தோன்றும் வினாவிற்குத் தக்கதோர் விடையுண்டு. ஏனையோரைப் பொறுத்தமட்டில் அவர்கள் உடம்பினுள் உரையும் உயிர்க்குயிராய் இறைவன் மறைந்து உறைகின்றான். அவன் அங்கு இருப்பதைச் சாதாரண மக்கள் அறிந்துகொள்வதில்லை. அங்கே இறைவன் மறைபொருளாகவே உள்ளான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/194
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை