178 38 இராமன் - பன்முக நோக்கில் இராமன் என்ற மனிதவடிவுள் மறைந்து தொழிற்படும் பரம்பொருள் தான் வந்த காரியத்தை மறப்பதேயில்லை. தசரதன் மகனாகப் பிறந்தது, அவனுக்குப்பின் ஆட்சியை ஏற்று நடத்துவதற்காகவா? இல்லையே. எனவே, தான் வந்த காரியத்தை நிறைவேற்றுவதற்குத் துரமொழியாள் ஆகிய கைகேயியின் மனம் திரியவேண்டும். கானிடை நீ செல்' என்று அவள் ஏவவேண்டும். இந்த முதல் திருப்பம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து இருந்ததால்தான் கைகேயியின் உரையைக் கேட்டபொழுது, அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றதாயிற்று அவன் முகம். முதல் திருப்ப முடிவில் வனத்திற்கு வந்தாயிற்று. தவம் செய்யவா வனத்திடை வந்தான் அடுத்த திருப்பத்திற்குக் கால்கோள் இடவேண்டும். எனவேதான், மானைப் பார்த்தவுடன் 'நன்றுனது (3293) என்று கூறினான். "நோக்கிய மானை நோக்கி நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன்; நன்று இது என்றான்; அதன்பொருள் சொல்லல் ஆகும்? சேக்கையின் அரவுநீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை அன்றோ? அன்னது பழுது போமோ?" - கம்ப 3293 வந்ததோ பொன்மான். மூவர் பார்க்கின்றனர் அம் மானை. பெண்ணாகியளபிராட்டி பார்த்தாள்; தன் விளையாட்டிற்கு அது உகந்தது என்று கருதினாள். அதே மானை இளையவன் பார்த்தான்; தெளிந்த சிந்தையில் ஆய்ந்து, இது அரக்கர் வஞ்சம்; இவன் மாரீசனே ஆவான்' என்ற முடிவிற்கு வந்தான். மூன்றாவதாக அம் மானைக் கண்டவன் யார் என்று குறிக்க வந்த கவிஞன் எம்மான் என்றும், இறைவன் என்றும், தேமலரோன் அம்மான் என்றும், பாற்கடல் பள்ளியின் நீங்கியவன் என்றும் கூறுவானே யானால், அப்படிப்பட்டவன் பார்வை, இலக்குவன் பார்வையாகவோ, சீதையின் பார்வையாகவோ இராது. இந்த மாறுபட்ட
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/196
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை