தம்பியரும் இராமனும் ே f79 பார்வையில் ஒர் இணையற்ற திருப்தி ஏற்படுகிறது. அதனால் மானைக் கண்டவுடன் நன்று இது என்று கூறினான் என்று பாடுகிறான் கம்பன். இந்த மானின் வரவு நல்லது என்று கூறினவன் யார் தெரியுமா? சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தவன். அவன் ஏன் பிறந்தான்? தசரதனுக்குப் பிள்ளை இல்லையே என்ற துயரத்தைப் போக்கவா பிறந்தான்? இல்லை. அதற்கென்று பிறந்திருந்தால் இறந்த தசரதனுக்குக் கொள்ளிகூட வைக்கவில்லையே! பின் ஏன் பிறந்தான் ? தேவர் செய்த பாக்கியத்தால் பிறந்தான் என்று கூறுவதால் இராமன் என்ற வடிவை மறந்துவிட்டு, பரமன் என்று வைத்துக் கொண்டால்தான் வந்த காரியம் நிறைவேறப் பேருதவி புரியப் போகிறது. இம் மான் என்ற கருத்தில்தான் நன்று இது என்றான். இங்குக் கூறிய அனைத்தையும் மனத்தில் கொண்ட கவிஞன், நன்று இது என்று இராகவன் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என்பதை, நம்மால் சொல்லமுடியுமோ? (அதன் பொருள் சொல்லல் ஆகும் :) என்ற வினாவோடு நிறுத்திவிடுகிறான். மான் வந்ததிலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளையும், சோதரர் இடையே நிகழ்ந்த உரையாடல்களையும் மற்றுமொருமுறை கோவையாகச் சிந்தித்துப் பார்த்தால் மானின் வரவு எதிர்பாராத ஒரு திடீர் நிகழ்ச்சி என்றோ இராவணன் சூழ்ச்சியால் நடந்தது என்றோ நினைப்பதற்கில்லை. தான் அவதாரம் எடுத்த காரணத்தை இராமன் வடிவில் அந்தராத்மாவாக உள்ளிருக்கும் இராமன் ஒவ்வொன்றையும் கணக்கிட்டே நிகழுமாறு செய்கின்றான் என்பதை அறியமுடிகிறது. முக்காலத்தையும் முழுதுணர்ந்தவனாகிய வசிட்டன், இளவரசனுக்கு முடிகவிப்பதற்கு ஒரு நன்னாளைத் தேர்ந்தெடுக்கிறான். என்ன விந்தை! அந்த நன்னாளில் முடிகவித்துக் கொள்வதற்குப் பதிலாக, கானகம் செல்ல நேரிடுகிறது. அன்பே வடிவான சிற்றன்னை இராமனைப் பெற்ற எற்கு இடருண்டோ என்று கூறும் சிற்றன்னை -
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/197
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை