$80 38 இராமன் - பன்முக நோக்கில் 'இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்ற செய்தியை முதலில் சொல்லிய ஒருத்திக்கு முத்துமாலையைப் பரிசாகக் கொடுத்த சிற்றன்னை ஒரே வினாடியில் மனம் மாறி விடுகிறாள். மைந்தனை அல்லாமல் உயிர்வேறு இலாத தசரத மன்னன் விழித்திருந்தால் இராமன் வனம்போக விட்டிருக்க மாட்டான். அந்தக் காட்சியைப் பாராமலிருக்க அவன் அவசமாகிவிடுகிறான். ஆக, இதுவரை நடந்தவற்றை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது இந்த வசிட்டன், தசரதன், கைகேயி, இலக்குவன் ஆகிய அனைவரும் இராமனுள் மறைந்திருக்கும் அந்த இராமனின் வாய் திறந்து பேசாத ஆணைக்குக் கட்டுப்பட்டே செயல் புரிகின்றனர் என்பது தேற்றம். இந்த நாடகத்தில் தசரதராமனும் ஒரு பாத்திரமாகிறான். பரம்பொருள் இராமன் அவன் உள்ளிருந்து இடும் கட்டளைக்கு ஏனையோர் போலவே தசரதராமனும் பணிகின்றான். மானின் வரவைப் பார்த்து, நன்று இது என்று சொல்லியவன் தசரதராமனா? அன்றி அவனுள் இருக்கும் மூல இராமனா என்று ஐயுறுவார்க்குக் கவிஞன் அந்தப் பாடலிலேயே விடைகூறுகிறான். "நோக்கிய மானை நோக்கி, நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன்; நன்று இது என்றான்" என்ற இந்த அடிகளின் பொருள் யாது? மான் மருண்ட பார்வை உடையதாயிற்றே. ஒரு வினாடிக்குமேல் எந்தப் பொருளையும் நிலைகுத்திக் காணும் இயல்பு மானுக்கு இல்லையே. அப்படியிருக்க மான் இராமனைப் பார்த்தது இராமன் மானைப் பார்த்தான் என்று சொல்ல வந்த கவிஞன் கண்டது, பார்த்தது என்ற சொற்களை விட்டுவிட்டு, நோக்கி என்ற சொல்லை வேண்டுமென்றே கவிஞன் பெய்கிறான். ஒரு குறிப்பிட்ட கருத்தோடு, அந்தக் கருத்தைக் கண்ணின் மூலமே வெளியிடும் சூழ்நிலை ஏற்படும்பொழுது நோக்கி என்ற சொல்லைப் பயன்படுத்துவது தமிழ் மரபு. இருநோக்கு இவள் உண்கண் உள்ளது (குறள் 109) என்றும்,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/198
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை