2 38 இராமன் - பன்முக நோக்கில் இன்றும் சிவன் கோயில்களில் முருகனுக்கு அருச்சனை செய்து முடித்தபின் சுப்ரஹ்மண்யோகம் என்ற சொல்லை மும்முறைப் பயன்படுத்துவதைக் காணலாம். அதைச் சொல்லும் அர்ச்சகர் முருகனுடைய பெயர் என்று நினைத்தே அதனைச் சொல்கிறார். வேதத்தில் வரும் இச் சொல் இந்திரனைக் குறிப்பதாகும் என்பதனை அறிதல் வேண்டும். சொல்லும் ஒசையும் ஒன்றாக இருந்தாலும் ராம, தசரத, சீதா என்று வேதத்தில் காணப்படும் சொற்கள் இராம காதையோடு ஒரு சிறிதும் தொடர்பில்லாதவை என்பதை அறிதல் வேண்டும். வேறு பொருளில் வழங்கப்படும் இச் சொற்கள் செவி வழக்காய் இடம் பெற்று, இதிகாச காலத்தில் இராமன், தசரதன், சீதை என்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டன. எட்டுத் திசைகளிலும், மற்றும் மேலும் கீழுமாகத் தன் தேரைச் செலுத்தியதால் அயோத்தி மன்னன், தசரதன் என்ற காரணப் பெயர் பெற்றான். சனக மன்னன் வேள்வி புரிவதற்காக நிலத்தை ஏர்ப்பூட்டி உழுதபொழுது ஏர்க்காலில் கிடைத்த பெண்ணாகையால் சீதா என்ற பெயர் காரணப் பெயராய் அமைந்தது. வேதத்தில் காணப்படும் ராம என்ற சொல் ஒரு சாதாரண மனிதனின் பெயராகவே பயன்படுத்தப் பட்டுள்ளது. தசரதன் கதை பெளத்த சாதகக் கதைகள்) விருப்பு, வெறுப்பின்றி எந்த ஒன்றையும் ஆராயும் பொழுது சமயப்பற்று குறுக்கே வந்து ஆய்வைத் தடைசெய்ய இடம் தரலாகாது. வான்மீகியின் இராமகாதை பாடப்பட்ட காலத்திலேயே புத்த சமயத்தைச் சார்ந்த சாதகக் கதைகள் வடபுலத்தில் மிகுதியாக வழங்கின. அந்தச் சாதகக் கதைகளுள் தசரத ஜாதகக் கதையும் ஒன்று. அந்தத் தசரதன் கதையில் இராமாயணம் பேசப்படுகிறது என்றாலும், வான்மீகம் உள்பட இன்று வழங்கும் அத்தனை இராமாயணங்களிலிருந்து சாதகக் கதைகளில் வரும் இராமாயணக் கதை முற்றிலும் மாறுபட்ட தாக இருக்கிறது. இக்கதையின்படி, தசரத மன்னன் வாரணாசி
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை