182 38 இராமன் - பன்முக நோக்கில் வேண்டும்” என்று இவ்வளவு தகவல்களையும் தன் கண்ணினாலேயே மூல இராமனுக்கு மானுள் இருக்கும் ஒரு சக்தி தெரிவித்தது என்ற கருத்தையெல்லாம் உள்ளடக்கிப் பாட வந்த கம்பன் நோக்கிய மானை நோக்கி என்று பாடுகிறான். பலர் கூடியிருக்கும் இடத்திலும், காதலர் இருவர் தம் கண்களினாலேயே ஒருவரை ஒருவர் நோக்கிப்பேசுவதை அறிந்த நாம், நோக்கிய மானை நோக்கி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இராமர் இருவர் - நிலை வெவ்வேறு இப்பொழுது ஒரு சிறிய பிரச்சினை தோன்றுகிறது. மானின் கண்மூலம் தெரிவிக்கப்பட்ட இச்செய்தியை இருவர் பார்க்கின்றனர். ஒருவன் தசரதராமன்; மற்றொருவன் அவனுள் இருக்கும் மூலஇராமன். மான் கண்ணின் மூலம் கூறியவற்றைத் தசரதராமன் புரிந்து கொண்டானா? தசரதராமன் அறிவின் மூலம் ஒன்றை ஆய்ந்து முடிவுக்கு வருபவன். இப்பொழுது அந்த அறிவு தொழிற்பட்டிருந்தால் இத்தகைய ஒரு மான் இயற்கையின் படைப்பில் இருக்க முடியாது என்பதை இலக்குவன் சொல்லு முன்னரே தெரிந்துகொண்டிருப்பான். அப்படித் தெரிந்துகொண் டிருந்தால் அவதார நோக்கம் நிறைவேறாது. எனவே, தசரதராமனின் அறிவைத் தொழிற்படாதவாறு முடக்கிவிட்டு, மூல இராமனுக்குத் தன் செய்தியை அறிவித்தது மானின் கண்கள் என்ற கருத்தையும் கவிஞன் பெறவைக்கின்றான். இந்தத் தசரதராமன் மானைப் பார்த்தவுடன் துதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன்; நன்று இது என்றான்' என்று கவிஞன் பாடுகிறான். துதியுடை மதி, இலக்குவனைப் போலப் பணிபுரிந்திருந்தால், மானின் பின்னே போயிருக்க மாட்டான். மானின் பின்னே அவன் போனால்தான் அவதார நோக்கம் நிறைவேறும். ஆதலால் தசரதராமனுடைய துதியுடை மதி: மூடிக் கொண்டது. மான் கண்ணின் மூலம் கூறிய செய்திகளை அறிந்த மூல இராமன் நன்று இது என்றான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/200
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை