தம்பியரும் இராமனும் ே 183 இதுவரை கூறியவற்றை மனத்துட் கொண்டுபார்த்தால், நன்று இது என்று கூறியவன் மூல இராமனே தவிர தசரதராமன் அல்லன் என்பது நன்கு விளங்கும். ஒரு பாடலில் இவ்வளவு பொருளும் விளங்கச் சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கவிதை புனையும் ஆற்றல் இராமபக்தனாகிய கம்பன் ஒருவனுக்கே முடியும். இலக்குவன் நிலை - ஒரு விளக்கம் இலக்குவனைப் பொறுத்தமட்டில் தன்னுடன் இருக்கும் மூத்தவன் பரம் பொருளே என்பதை நன்றாக உணர்ந்திருந்தான் என்றாலும், பல சமயங்களில் இதை உணராதவன் போல நடந்து கொள்வதைக் காண்கிறோம். மாய மான் பற்றிய உரையாடலில் அறிவின் எல்லையில் இருக்கும் இராமன் போலி வாதங்களை முன்வைத்த பொழுதே இலக்குவன், இதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவன் அவ்வாறு செய்யவில்லை. இதே போன்று கிட்கிந்தையில் முதன்முதலாக மாணிவடிவில் இருந்த அனுமனை இலக்குவன் இன்னான் என்று அறிந்து கொள்ளவில்லை; அறிந்த கொள்ள முயலவுமில்லை. இராமன் அறிவுறுத்தியபொழுதும் அறிந்துகொள்ளவில்லை. இந்த இரண்டு இடங்களிலும் சுமித்திரை சிங்கம் இவ்வாறு நடந்தகொள்வதற்குரிய காரணத்தையும் ஒருவாறு ஊகிக்க முடியும். அண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் பாதுகாவலனாகப் பொறுப்பேற்று வந்துளன். ஆதலின் இயற்கைக்கு மாறுபட்ட எதைக் கண்டாலும், அதனால் அவர்களுக்குத் தீங்கு உண்டாகுமே என்ற அச்சம் காரணமாகத்தான் அவ்வளவு பிடிவாதமாக வாதம் செய்தான். அனுமனைப் பொறுத்தமட்டில் மாணிவடிவில் சென்ற அவனைச் சொல்லின் செல்வன் என்றும், அவன் கல்லாத கலையே இல்லை என்றும், இவ்வுலகுக்கெல்லாம் ஆணி என்றும் இராமன் புகழ்ந்து பேசியதை இலக்குவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/201
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை