பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 38 இராமன் - பன்முக நோக்கில் அறிந்து கொள்ளுமாறு இந்தப் படலம் முடியப் பாடிவந்துள்ளான் கவிஞன். இப்பொழுது இராமனும், இலக்குவனும் ச்ந்தித்ததிலிருந்து காப்பியத்தின் முடிவுவரை மூல இராமன் மறைந்துவிடுகிறான். அதன் பயனாக தசரதராமன் ஏனைய மனிதர்களைப் போலவே துன்பமும் துயரமும் அனுபவிப்பதையும், மனைவியைப் பிரிந்து பெரும் அவலத்திற்குள்ளாவதையும் அந்தந்த இடங்களில் மிக விரிவாகப் பாடிச் செல்கிறான் கவிஞன். மூல இராமனைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது நம் மனத்தில் தோன்றும் அச்சம் கலந்த மரியாதையும் வியப்பும் தசரதராமனை இனிவரும் பகுதிகளில் காணும்போது மறைந்துவிடுகின்றன. அதற்குப் பதிலாகத் தாய் தந்தையரைப் பிரிந்து, மனைவியை அழைத்துக் கொண்டு வனவாசம் வந்த ஒர் அரசகுமாரனிடம் எவ்வளவு பரிவும், அன்பும், இரக்கமும் காட்டமுடியுமோ அவ்வளவும் காட்டுகிறோம். அவன் மகிழும்போது நாமும் மகிழுகிறோம். அவன் துயரடையும் போழுது நாமும் துயரடைகிறோம். மனைவியைப் பிரிந்து நொந்து நிற்கும் அவனிடம் எல்லையற்ற பரிவும் இரக்கமும் நமக்குத் தோன்றுகின்றன. காப்பிய நாயகனாகிய அவன் நிர்குண நிராமய நிராலஞ்சனம் ஆகிய பரம்பொருள் என்ற நினைவு நம்மனத்தை விட்டு அகன்று விடுகிறது. நம்முன் ஒருவனாக அவனை ஏற்றுக்கொள்வதால் அவனுடைய சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்கின்றன. இத்தகைய ஒரு மனநிலையைக் கற்பார் மனத்தில் ஏற்படுத்த வேண்டும். காப்பிய நாயகனோடு அனைவரும் உறவு கொண்டாட வேண்டும் என்றுதான் கவிச்சக்கரவர்த்தி நினைத்திருக்க வேண்டும். அந்த நினைவு அவன் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வெற்றியை வாங்கித் தந்துள்ளது என்பது 32.6's Tóð it). இராம - பரத சந்திப்பின் பின் இலக்குவன் இந்தப் படலம் வரை அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு அறிவு கொண்டு ஆராயாத முடிவுகளைக் கொண்டு அதன்