தம்பியரும் இராமனும் ேே 187 பயனாக இராமனையும் சிக்கலில் இறக்கிவிடும் சூழ்நிலையில்தான் இலக்குவனைக் கண்டோம். வனத்திடை வாழும் இராம இலக்குவர்கள் பரதனைச் சந்திக்கின்றவரை இந்த மனநிலைதான் இலக்குவனிடம் நிரம்பியிருந்தது. இராமனைச் சந்தித்த பரதன் பேசிய பேச்சுக்கள், நடந்து கொண்ட முறை, இராமன் சொல்லுக்குக் கட்டுப்பட்ட முறை, அவன் திருவடிகளையே அரசு செலுத்தும் முதற்பொருளாக வைத்து ஆட்சி செய்யப்போவதாகக் கூறிய திறன் ஆகிய அனைத்தும் இலக்குவன் பண்பட உதவின. இப்பொழுது இலக்குவன் முழுவளர்ச்சி அடைந்துவிட்டான். மாயமானுக்குப் பிறகு அண்ணனுக்கு மாறுபட்டு அறஉரை கூறவேண்டிய சந்தர்ப்பம் வரவே இல்லை. இந்த முழுவளர்ச்சி அடைந்த இலக்குவன், அண்ணனைச் சார்ந்து நிற்பவனாக இதுவரை இருந்த இலக்குவன், இனி துயரத்தில் மூழ்கிய அண்ணன் தன்னைச் சார்ந்து இருக்கக்கூடிய அளவிற்கு மனத்திடமும் வளர்ச்சியும் பெற்று விட்டான். பர்ணசாலையும் சீதையும் காணப்படவில்லை - பின் நிகழ்வுகள் மாயமானைக் கொன்று திரும்பிய இராகவன் இலக்குவனிடம் நடந்தவற்றை அறிந்துகொண்டு, ஒட்டமும் நடையுமாகப் பர்ணசாலைக்கு வருகிறான். பர்ணசாலையில் சீதை இல்லாததைக் கண்ட இராகவன் ஆற்றொணத் துயருடன் அழுது புலம்புவதைக் கவிஞன் பல பாடல்களில் கூறிச் செல்கிறான். அவன் அஞ்சியது போலவே அங்குப் பிராட்டி இல்லை. தேர்த்தடம் தெரிகிறது. சோதரர்கள் இருவர் தேர்க்கால் வழியைப் பின்பற்றி வந்து, பின்னர் அது மறைந்து விடவே அத்தேர் வானிடைச் சென்றுவிட்டது என்பதை அறிகின்றனர். தென்திசையில் தேர் சென்றிருக்க வேண்டும் என்ற அனுமானத்துடன் நடந்து செல்கையில் சோதரர் இருவரும் ஒரு சிறிதும் எதிர்பாராத வகையில் கழுகின் வேந்தன் குருதி
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/205
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை