188 ேே. இராமன் - பன்முக நோக்கில் வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனர். இக்காட்சி, ஏற்கெனவே துயரில் மூழ்கியிருக்கும் இராமனைப் பெரிதும் பாதித்து விட்டது. "குழந்தைகளே! நீங்கள் பஞ்சவடிவில் தங்கும்பொழுது என் பாதுகாவல் உங்களுக்கு உண்டு என்று சொல்லிய கழுகின் வேந்தனாகிய தந்தை இப்பொழுது குருதி வெள்ளத்தில் கிடக்கிறான். துயரக் கடலில் மூழ்கி இருக்கும் இராமனுக்கு இக்காட்சி மனம் இற்றுப்போகும்படி இருந்ததால் சடாயுவின்மேல் விழுந்து மூர்ச்சை ஆகிவிடுகிறான். இதுபோன்ற இடங்களில், அதாவது முன்னவன் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளாடும் நிலையில் முழு வளர்ச்சி பெற்றுவிட்ட இலக்குவன், அண்ணனைத் தன்மேல் சார்த்திக் கொண்டு அமைதி அளிப்பதைத் தொடர்ந்து காணமுடியும். மேல் விழுந்த இராமனின் கண்கள் சொரிந்த சூடான நீர் பட்டவுடன் சாடாயுவிற்கு மூர்ச்சை தெளிகிறது. பிராட்டியை எடுத்துச் சென்றவன் இராவணன் என்பதை அவன் கூறினவுடன் தன்னிரக்கமும், சினமும் ஒருசேர இராமனை ஆட்கொள்கின்றன. இராமன் கொண்ட தன்னிரக்கம் தன்னிரக்கம் கொண்ட இராமன் பேசியவற்றைக் கவிஞன் எட்டுப் பாடல்களில் (3494 - 350 விரிவாகக் கூறுகிறான். இப்பாடல்களைப் படிக்கும் பொழுது இராமனிடம் இதுவரை நாம் காணாத ஒரு பரிணாமம் வெளிப்படக் காண்கிறோம். வன்மை அற்றவர்கள், எதிர்வருவனவற்றைச் சந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள், மனோதிடம் இல்லாதவர்கள் ஆகியவர்கள்தாம் தன்னிரக்கம் கொண்டு புலம்புவார்கள் என்று மனவியலார் கூறுகிறார்கள். இராமனை ஒத்த பெருவீரன் எவனையும் அழிக்கும் ஆற்றலுடைய அம்புகளையும் வில்லையும் வைத்துக் கொண்டிருந்தும் ஏன் இவ்வாறு பேசவேண்டும்? அவன் பேசியவற்றைக் கீழே சுருங்கக் காணலாம்: -
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/206
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை