தம்பியரும் இராமனும் ேே 189 "தந்தையர் இருவரும் (தசரதனும், சாடாயுவும்) இறப்பதற்குக் காரணமாக இருந்த என்போன்ற பிள்ளைகள் எங்கேனும் உண்டோ? என் அருமைத் தந்தையே! உனக்கு நானே எமனாக ஆகிவிட்டேன்." (3497) "தந்தையே! பெண் ஒருத்தி ஆசைப்பட்டாள் என்பதற்காகப் பின் விளைவுகளை ஆராயாமல் மானின் பின்னே சென்றேன் நான். தேவை ஏற்பட்டபொழுது ஒற்றையாக இருந்த நீ உன் மருமகளைக் காப்பதற்காக உயிரைக் கொடுத்து உன் கடமையைச் செய்துவிட்டாய். உறவு என்று சொல்லத் தக்கவர் யாருமின்றித் தனியனாக ஆகிவிட்டேன் நான்." (3498) ‘ஐயனே! இவற்றைக் கண்ட நான் உயிர் விட்டிருக்க வேண்டும். முனிவர்களின் குறையைத் தீர்ப்பேன் என்று விரதம் பூண்டதால் இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். தனிமரம்போல நிற்கின்ற நான் எப்பயனையும் விளைக்காத இந்த மாயப் புன்பிறவியை வேண்டேன்" (3499) "என் மனைவியை ஒருத்தன் கவர்ந்து செல்லவும், அது பொறுக்காமல் நீ அவனுடன் போர் செய்து கொலையுண்டாய். உன்னைக் கொன்றவனும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான். இந்த நிலையில் எல்லையற்ற அம்புக் கூட்டங்களை வைத்திருக்கும் அம்பறாத்துரணியையும், நீண்ட பெரிய வில்லையும் எவ்விதப் பயனும் இன்றி வைத்துக் கொண்டு நெடுமரம் போல் நிற்கின்றேன் யான்". (3500) - மேலே உள்ள சொற்களைப் பேசியவன், கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொன்றவன் என்று நினைக்கும் பொழுது வியப்பு மேலிடுகிறது. எல்லையற்ற பெருந்துயரம் எதிர் கொண்டுவிட்டது என்பதில் ஐயமில்லை. துயரால் வருந்துவதும் அழுவதும் ஒரளவு நியாயமானதே ஆகும். அதன் எதிராக இத்தனை பாடல்களில் நெடுமரம் போல் நின்றேன், தந்தைக்குக் கூற்றாகி விட்டேன், பயனில்லாமல்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/207
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை