தம்பியரும் இராமனும் ேே 191 பகையை முடிப்பேன் என்று சபதம் செய்தான் இராகவன். இந்த அம்புகளைக் கொண்ட முனிவர் பகை முடிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தன் பகையை முடிக்கக்கூட இவ் வம்புகள் பயன்படவில்லையே. மனைவியைக் கவர்ந்தவனும் தந்தையைக் கொன்றவனுமாகிய ஒருவன் இன்னும் உயிர் வாழ்கின்றான். இந்த அம்புகள் இன்னும் துரணியில் உறங்குகின்றன. இந்த முறையில் இராகவனுடைய மனத்தில் சிந்தனைகள் ஓட ஓட அவன் தன்னிரக்கம் கொண்டதில் எவ்விதத் தவறும் இல்லை. அவனை ஒத்த பெருவீரர்கள் தன்னிரக்கம் கொள்ளக்கூடாது என்று மனவியலார் கூறலாம். வந்த துயரம் எல்லையற்றுப் போகுமானால் தன்னிரக்கம் வருவது இயல்பே ஆகும். பசிக்கின்ற நேரத்தில் சோறு கிடைக்காமல் தவிப்பது ஒருவகை அறுசுவை உண்டி இருந்தும் அதை உண்ண முடியாமல் இருக்கின்ற நிலை மிகக் கொடுமையானது. பகை முடிக்கும் ஆற்றலோ, அதை முடிக்கும் கருவிகளோ இல்லாமல் இருக்கின்ற ஒருவன் தன்னிரக்கம் கொள்வது பொருளற்றதாயினும் மனித இயல்பே ஆகும். அறுசுவை உண்டியை எதிரே வைத்துக்கொண்டு அதை உண்ண முடியாதிருப்பவன் தன்னிரக்கம் கொண்டு பேசுவது பரிதாபமான ஒரு சூழ்நிலை ஆகும். அந்த நிலைதான் இப்பொழுது இராகவன் நிலை. இந்த ஒன்பது பாடல்களில் இராமனிடம் இதுவரையில் காணப்படாததும், இனிக் காண முடியாததும், இந்த ஒரு இடத்தில் மட்டும் காணப்படுவதும் ஆகிய தன்னிரக்கம் என்ற இந்தப் புதிய பரிமாணத்தைக் கவிஞன் காட்டுகிறான். பெரும்பாலும் பேராற்றல் உடையவர்கள் தன்னிரக்கம் கொள்வதில்லை. எதிர்பாராமல் நேர்ந்தது இந்தப் பேரிடி, கையில் வில்லும் அம்பும் இருந்தும் இதிலிருந்து மீள முடியவில்லையே என்ற ஆதங்கமே இந்தத் தன்னிரக்கத்திற்குக் காரணம் ஆகும். வாய்விட்டுப் புலம்பிவிட்ட பிறகு இந்தத் தன்னிரக்கம் மறைந்தபோது அந்த இடத்தில் பெருஞ்சினம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/209
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை