பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 38 இராமன் - பன்முக நோக்கில் நிலைபெறுகிறது. இப்பொழுது இராமன் பேசும் பேச்சுக்கள் நம்மையே திகைக்கவைக்கின்றன: தன்னிரக்கம் ஒடுங்கியபோது "ஓர் அபலைப் பெண்ணை அரக்கன் ஒருவன் வவ்விச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்த உலகங்கள், உயிர்கள், தேவர்கள் ஆகிய அனைவரையும் பழிவாங்குவேன்" (3519) "விண்மீன்கள் உதிரவும், பஞ்சபூதங்கள் நிலைகுலையவும், கதிரவன் முதலியவர்கள் பொடிப்பொடியாக உதிரவும், பதினான்கு உலகங்களும் உடைந்து பொடியாகுமாறும், அண்டகோளம் கீறி அதற்கப்பால் உள்ளவையும் அழியுமாறும்" இராகவனின் இந்த வஞ்சின மொழிகளைக் கேட்டு கதிரவன் நடுங்கி மேல் திசையில் மறைந்தான். திக்கயங்கள் தம் இடத்தை விட்டு அப்பால் ஓடின. (3520, 3521, 3522) அண்ணனை நன்கறிந்த இலக் குவனே கூட மிரண்டுவிட்டான். காத்தல் கடவுளான திருமால் தீயோரை ஒடுக்கி, நல்லவர்களை வாழவைக்க, இராமாவதாரமாக வந்த நிலையில் அந்த இராமனே 'ஏழுலகங்களையும் அழிப்பேன்’ என்று தொடங்கினால் அவனைத் தடுத்து அறவுரை கூறக்கூடியவர் யார்? நமக்குத் தெரிந்த வரையில் இருவர் உளர். ஒருவன் தசரதன். அவன் இப்பொழுது இறந்துவிட்டான். மற்றொருவன் வசிட்டன். அவனோ அயோத்தியில் இருக்கிறான். இந்த நிலையில் தந்தையின் உரிமை பூண்டு சிற்றப்பனாக விளங்கும் கழுகின் வேந்தன்தான் இராமனுக்கு அறிவுரை கூறமுடியும். உயிர்போகும் தறுவாயில்கூடக் கழுகின் வேந்தன் தன் கடமையைச் செய்ய மறக்கவில்லை. சடாயு கூறிய அறிவுரையைத் தந்தை தயரதன் கூறியதாகவே இராமன் கருதி மதித்தான். புயல்நிற வண்ணன், ஆண்டு, அப்புண்ணியன் புகன்ற சொல்லைத் தயரதன் பணி ஈது என்னச் சிந்தையில் தழுவி நின்றான் (3528) என்பது கம்பன் வாக்கு. அவன் அறவுறை கூறிய விதமே மிக