194 36 இராமன் - பன்முக நோக்கில் முடியாமல் குழம்பி இருந்தவனைத் தெளிந்த அறிவுடைய தம்பி என்ன சொல்லித் தேற்றுகிறான் என்று பார்ப்பது சிறப்புடையதாகும். "எந்தை ! நீ இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகி, ஏழைச சந்தவார் குழலினாளைத் துறந்தனை தணிதியேனும், உந்தையை உயிர்கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லாச் சிந்தையை ஆகிநின்று செய்வத என் செய்கை?" என்றான்." - கம்ப. 3534 இந்தப் பாடலில் இராமன் இரண்டு கடமைகளைச் செய்ய வேண்டும்மென்று இலக்குவன் நினைவூட்டுகிறான். முதலாவது கடமையாக அவன் நினைவூட்டுவது ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் இராமனைத் தட்டி எழுப்புவது போல் அமைந்துள்ளது. "ஐயனே! நீ என்ன முடிவுக்கு வந்தாய்? இப்பொழுது பிராட்டியை விடுவிக்க வேண்டியது தேவையில்லை என்ற முறையில் உன் கோபம் தணிந்தாலும், நமது சிறிய தந்தையைக் கொன்றவன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்றால், அவனைப் பழிவாங்காது வாளா இருப்பது என் கருதி' என்ற முறையில் இலக்குவன் பேசியது, துயர உணர்ச்சியில் மூழ்கியிருக்கும் இராமனுக்கு . தன்னிரக்கம் கொண்டிருந்த இராமனுக்கு - தன் சுயநினைவுக்கு வருமாறு இளையவன் செய்த பணிதான் இது. அயோமுகி நிகழ்ச்சி - இலக்குவன் வளர்ச்சி அயோமுகிப் படலத்தில் தம்பிக்குத் தனியான ஒரு சோதனை வருகிறது. அயோமுகி என்ற அரக்கியிடம் அகப்பட்ட இலக்குவன் அவளைக் கடுமையாகத் தண்டித்துவிட்டு அண்ணனிடம் மீண்டு வருகிறான். அயோமுகியை இலக்குவன் தண்டிக்கிற நேரத்தில் இராமன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/212
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை