பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே tg8 உடனில்லை. ஆதலால் மீண்டுவந்த தம்பியை அங்கு நிகழ்ந்தது என்? என்று வினவினான். (3625) நான்கு பாடல்களில் நடந்தவற்றை விரிவாகக் கூறிய இலக்குவன், இறுதியாக ஒரு செய்தியைச் சொல்லி அண்ணனை வணங்கி நிற்கின்றான். "துளைபடு மூக்கொடு செவி துமித்து உக, வளைஎயிறு இதழொடு அரிந்து மாற்றிய அளவையில், பூசலிட்டு அரற்றினாள், என, இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான்." - கம்ப 3631 "மூக்கு முதமான உறுப்புகளை நான் அரிந்தபொழுது அந்த அரக்கி அரற்றிய கூச்சல் தங்கள் காதுவரை எட்டியது" என்று கூறிவிட்டு, தமையனைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கி நின்றுவிட்டான். ஆம்! பெண்ணாதலின் அவளை நான் கொல்லவில்லை என்பதுதான் இந்த வணக்கத்தின் பொருளாகும். அதை ஒரு வேளை வெளிப்படையாகச் சொல்லியிருந்தால், தான் தாடகையைக் கொன்ற நினைவு வர, இராகவன் மனத்தில் ஒரு சலனம் ஏற்படும். அதனால்தான் அரற்றினான் என்று மட்டும் கூறி முடித்துவிட்டான். ஆம்! இராமானுஜனாகிய இளையவன் மிக விரைவாக மனமுதிர்ச்சி பெற்று வருகிறான் என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும். தம்பியின் அறிவுடைமைக்கும், சொல் சாதுர்யத்திற்கும் எவ்விதத்திலும் குறைந்தவன் அல்லன் இராகவன் என்பதை அடுத்த பாடல் தெரிவிக்கின்றது. "தொல்இருள், தனைக் கொலத் தொடர்கின்றாளையும், கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்; வல்லை நீ மனு முதல் மரபினோய்' என, புல்லினன் - உவகையின் பொருமி விம்முவான்" - கம்ப 3632