தம்பியரும் இராமனும் ேே 197 வனத்தில் இருந்து மீண்டால் உடன் வருக. இன்றேல் முன்னம்முடி என்றாள் அல்லவா? அத்தாயின் கட்டளையை நிறைவேற்றும் முறையில் நானே முன்னம் முடிய வேண்டியவன்” (367) இதனை அடுத்துத் தளர்வுற்ற மனத்தினனாகிய இராகவன் மனத்தில் ஒரு சில நினைவுகளைத் தோற்றுவிக்கும் முறையில் இலக்குவன் கூறும் இரண்டு பாடல்கள் சிந்தனைக் குரியன. "ஒதுங்கால், அப்பல் பொருள் முற்றுற்று, ஒருவாத வேதம் சொல்லும் தேவரும் வியும் கடைவியாய், மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின் தலைவாழும் பூதம் கொல்லப் பொன்றுதி என்னின், பொருள் உண்டோ" - கம்ப. 3673 "கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேனார்; கிளர் போரில் தோட்டார் கோதைச் சோர் குழல்தன்னைத் துவளாமல் மீட்டான் என்னும் பேர் இசைகொள்ளான், செருவெல்ல மாட்டான், மாண்டான்" என்றலின் மேலும் வசை உண்டோ? - கம்ப. 3674 ‘ஐயனே! அண்ட பேரண்டங்கள் அனைத்தும் அழிந்து, சாவாதவர் என்று பெயர்பெற்ற தேவரும் அழிகின்ற காலத்திலும் நீ ஒருவன்தானே எஞ்சி நிற்கப் போகிறாய். அப்படிப்பட்ட நீ, கேவலம் யானைகளைத் தின்று உயிர் வாழும் வனத்தில் வாழும் ஒரு பூதத்தினால் கொல்லப்பட்டாய் என்றால் யார் அதனை நம்புவார்கள்! "ஐயனே! நீ இவ்வாறு இறந்தாய் என்றால், அதனைக் கேட்பவர்கள் நம்பமாட்டார்கள். இதனை நேரே கண்டவர் g இதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மலர்க் கூந்தலை உடைய சானகியை மீட்டு வந்தான் என்ற புகழைப் பெறாமல், போரில் வெற்றி பெற முடியாமல்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/215
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை